நடிகை சரண்யா பொன்வண்ணன் டாக்டர் மகளின் திருமணம் – நேரில் சென்று வாழ்த்திய முதல்வர்.

0
1509
saranya
- Advertisement -

ஒரு காலத்தில் உலகநாயகன் கமலுக்கே ஜோடியாக நடித்தவர் சரண்யா பொன்வண்ணன். நாயகன், அஞ்சலி என பல ஹிட் படங்களில் நடித்த சரண்யா தற்போது அனைத்து படங்களிலும் அம்மா கேரக்டரில் நடித்து அசத்தி வருகிறார். அதிலும் தற்போது உள்ள பெரும்பாலான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றால் இயக்குனர்களின் முதல் சாய்ஸ் இவராக தான் ருக்கும். இவர் தன்னுடன் நடித்த பொன்வண்ணனை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

-விளம்பரம்-

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது வாங்கியுள்ளார் சரண்யா பொன்வண்ணன். எம்டன் மகன், வேலையில்லா பட்டதாரி, களவாணி, முத்துக்கு முத்தாக, மகளிர் மட்டும், ஒருகல் ஒருகண்ணாடி, கொடி என பல படங்களில் அம்மாவாக நடித்து தன் அபார திறமையை நிரூபித்துள்ளார் சரண்யா.

- Advertisement -

மேலும், இவரது நடிப்பிற்காக பல விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறார். தற்போதும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் விருகம்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் ஒரு பேஷன் டிசைனிங் ஸ்கூல் வைத்துள்ளார் சரண்யா. படங்களில் நடித்துக்கொண்டே இந்த பேஷன் டிசைனிங் ஸ்கூலில் 300 பேருக்கு பேஷன் டிசைனிங் மற்றும் ஸ்டிச்சிங் சொல்லி கொடுத்துள்ளார் இந்த மகராசி சரண்யா பொன்வண்ணன்.

இப்படி ஒரு நிலையில் இவரது மூத்த மகள் பிரியதர்ஷிக்கு நேற்று (ஜூலை 5) திருமணம் நடைபெற்று உளது. இவருடைய மகள் பிரியதர்ஷினி சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் மருத்துவபடிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று கோலாகாலமாக நடைபெற்ற சரண்யா பொன்வண்ணன் மகளின் திருமணத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement