சரத்குமார் தன்னுடைய 22வது திருமண நாளன்று வெளியிட்ட அழகான வீடியோ.

0
292
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னனி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சரத்குமார் தன்னுடைய 22வது திருமணம் விழாவை கொண்டாடி புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சரத்குமார் ஒரு நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடிபில்டர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இவர் படங்களில் வில்லன் வேடத்தில் தான் நடித்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக கலக்கி இருக்கிறார். மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார். மேலும், இவர் அந்தக் காலத்திலேயே உடற்பயிற்சிகளை ஒழுங்கான முறையில் மேற்கொண்டு உடல் கட்டுக்கோப்புடனும், உடல் ஒருங்கிணைப்பாகவும் வைத்திருந்தவர்.

- Advertisement -

சரத்குமார் திரைப்பயணம்:

அதுமட்டுமில்லாமல் சரத்க்குமார் 20 வயதிலே மிஸ்டர் மெட்ராஸ்(சென்னை ஆணழகன் ) என்ற போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தையும் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சரத்குமார் – ராதிகா :

மேலும் வாரிசு படத்திலும் தன்னுடைய இயல்பான நடிப்பினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். இப்படி சினிமா துறையில் கலக்கி வரும் சரத்குமார் வாழ்க்கையிலும் பிரபலமான சினிமா நடிகையான ராதிகாவை கடந்த 2001ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சரத்குமார் – ராதிகா சரத்குமார் தம்பதிக்கு ராகுல் என்ற மகனும் இருக்கிறார். ஆனாலும் தன்னுடைய முதல் மனைவியின் குழந்தைகளான வரலட்சிமி சரத்குமார் மற்றும் பூஜா இருவரையும் எந்த பாகுபாடும் இன்றி வளர்த்து வருகிறார்.

-விளம்பரம்-

22வது திருமண விழா :

இப்படி பட்டநிலையில் தான் கடந்த 4ஆம் தேதி சரத்குமார் – ராதிகா தம்பதி தங்களுடைய 22வது ஆண்டு திருமண விழாவை கொண்டாடினார்கள். அப்போது சில அழகான புகைப்படங்களையும் சரத்குமார் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து ஒரு பதிவு ஒன்றயும் இணைத்திருந்தார். அந்த பதிவில் கூறுகையில் “22 வருடங்கள், இது எங்கள் வாழ்வின் நீண்ட பேரின்பப் பயணம், அன்பின் பயணம், புரிதலின் பயணம், தியாகங்களின் பயணம், ஒற்றுமையின் பயணம் என மகிச்சியான பயணமாக இருந்தது.

இதுவரை வாழ்க்கையின் அனைத்து உணர்ச்சிகளையும், மகிழ்ச்சியையும், சோகத்தையும், புயல்களையும் கண்டு வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை புரியவைத்தற்கு நன்றி. இந்த நல்ல நாளில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன், அவர் நம்மை எப்போதும் ஒன்றாக வைத்திருப்பார், வரவிருக்கும் எதிர்கால ஆண்டுகளில் நம்முடைய அழகான குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

Advertisement