தன் மகனுக்கு உடற்பயிற்சி கற்றுத்தரும் நடிகர் சரத்குமார் ! வைரலாகும் வீடியோ !

0
2366
rahul-sarathkumar

கிட்டத்தட்ட 63 வயதாகும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இன்றும் அவரது உடம்பினை ஒரு பாடி பில்டர் போல் மெய்ன்டெய்ன் செய்து வருகிறார். கிட்டத்தட்ட தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சரத்குமார். அவரது இளம் வயதில் தனது ஆஜானுபாகுவான உடற்கட்டை வைத்தது மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் வென்றவர் இவர். தற்போது அவரது சிறு வயது மகன் ராகுல் சரத்குமாருக்கும் அப்படி ஒரு உடற்கட்டை உருவாக்க பயிற்சி அளித்து வருகிறார். அவரது மகனுக்கு பயிற்சி கொடுக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளத்தில் வைரல் ஆகி வருபிறது.