சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாட்டு பலருடைய வாழ்க்கையை சூறையாடிக் கொண்டு வருகின்றது. இந்த விளையாட்டின் மூலம் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்திருக்கின்றனர். இதனால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.ஆனால், இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள் தான் நடித்து மக்கள் மத்தியில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

இது குறித்து சோசியல் மீடியாவிலும் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தமிழகத்தில் அதிக அளவில் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இந்த வகை விளையாட்டுகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

Advertisement

இச்சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்ததால் அக்டோபர் மூன்றாம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீண்ட காலமாக அந்த மசோதா கிடப்பில் இருந்த நிலையில், ஆளுநர் ஆர்என் ரவி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த தடைச் சட்ட மசோதா காலாவதியாகிவிட்டது. இருப்பினும் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விளம்பரத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளையும் மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில் ரம்மி விளம்பரத்தில் நடித்த நடிகர் சரத்குமாரை அடிக்கடி நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ரம்மி நாயகன் என்ற பெயரையும் வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், இதுகுறித்து பேசிய அவர் ”‘ரம்மி என்பது அறிவு பூர்வமான விளையாட்டு என்றும் அதை விளையாட திறமை அவசியம். குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாம் ஆன்லைன் ரம்மி காக தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறி வருகின்றனர்.

Advertisement

ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் ஆபாச படங்கள், கிரிக்கெட் சூதாட்டம் போன்ற அனைத்தையும் தடை செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் சரத்குமார் கலந்து கொண்டார் இந்த விழாவிற்கு சரத்குமார் மிகவும் சந்தோஷமாக ஏற்றுக் கொடுத்தார் அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் ரம்மி நாயகன் என்று கோத்திரத்தார் இதனை கேட்ட சரத்குமாரின் முகமே மாறிவிட்டது.

Advertisement