தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னனி நடிகராகவும்,அரசியல்வாதியாகவும் சிறந்து விளங்கியவர் சரத்குமார்.இவர் ராமநாதன் மற்றும் புஷ்பலீலா ஆகிய தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி பிறந்தார்.கணிதத்தில் இளங்கலை பட்டப் படிப்பை சென்னையிலுள்ள புதுக்கல்லூரியில் படித்துள்ளார்.சரத்குமார் ஒரு நடிகராகவும், அரசியல்வாதியாகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடிபில்டராக , ஆகவும் இருப்பவர். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் பல படங்கள் நடித்துள்ளார். இவர் முன்னால் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார். இவர் இந்த அளவிற்கு ஆரோக்கியமாகவும் , உடம்பு பிட்னஸ் ஆக காரணம் உடற்பயிற்சி தான் . இவர் அந்தக் காலத்திலேயே உடற்பயிற்சிகளை ஒழுங்கான முறையில் மேற்கொண்டு உடல் கட்டுக்கோப்புடநும்,உடல் ஒருங்கிணைப்பாகவும் வைத்திருந்தவர்.அதுமட்டுமில்லாமல் சரத்க்குமார் 1974 ஆம் ஆண்டு அதாவது 20 வயதிலே மிஸ்டர் மெட்ராஸ்(சென்னை ஆணழகன் ) என்ற போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தையும் வென்றார். அந்த காலத்திலேயே ‘மிஸ்டர் மெட்ராஸ்’ பட்டம் வென்றவர்.

இதையும் பாருங்க : பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்ட்ட வைரமுத்து. குஷியில் சின்மயி போட்ட ட்வீட்.

Advertisement

தற்போது இவருடைய ‘மிஸ்டர் மெட்ராஸ்’ புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டு வருகிறது. அது மட்டுமில்லாமல்,இவர் அன்று முதல் இன்று வரை உடல் நலம் குறித்து உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருவார். இவர் சினிமாத்துறையில் முதலில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இவருடைய வில்லன் நடிப்பும் ,உடற்கட்டமைப்பும் என ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. அவருடைய சிறந்த நடிப்பு திறமையால் “சூரியன்” என்ற படத்தில் முதன்மையான வேடத்தில் சிறப்பாக நடித்தார். அதற்குப் பிறகு அவருடைய படங்கள் மூலம் அதிகளவு மக்களிடையே பிரபலமானர்.

இவருடைய புலன்விசாரணை, நட்புக்காக, சூரியவம்சம், நாட்டாமை, கம்பீரம், ஆகிய ஹிட்டான படங்களை கொடுத்ததன் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் பெற்று உள்ளார். அதுமட்டுமில்லாமல், இவர் நடிப்புக்காக நிறைய விருதுகளையும், கலைமாமணி பட்டங்களையும் பெற்றுள்ளார். இவருடைய நடிப்பு ஒரு பக்கத்தில் இருந்தாலும் இவர் அரசியல் பல இயக்கங்களில் பங்கேற்றார். தற்போது இவர் ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’ என்னும் ஒரு அரசியல் கட்சியை துவக்கி நடத்தி வருகிறார்.

Advertisement
Advertisement