கடலுக்கு சென்று திரும்பாத அப்பா, ஏமாற்றம், அவமானம் – சரிகமபவின் மூலம் பிரபலமான பாடகரின் நிலை இதான்.

0
3443
Nagarjuna
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகம நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சி மூன்றாவது சீசன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இதில் கார்த்திக், விஜய் பிரகாஷ், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடுவர்கள் ஆக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் அர்ச்சனா தான் தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் இந்த நிகழ்ச்சி 23 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று இருந்தார்கள். இதில் தற்போது 12 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் அக்ஷயா, ஜீவன் இருவரும் பிரமாதமாக பாடி நேரடியாக பைனலுக்கு சென்று விட்டார்கள். மீதி போட்டியாளர்கள் மத்தியில் கடுமையாக போட்டி நிகழ்ந்து வருகிறது.

- Advertisement -

சரிகமப நிகழ்ச்சி :

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் நாகர்ஜுனா. இவர் இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய குரலால் பல பாடல்களை பாடி பலருடைய மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். இவர் ராமநாதபுரத்தில் ஒரு மீனவர் குடும்பத்தை சேர்ந்தவர். தன்னுடைய திறமையால் தான் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறார். இவர் தான் மீன் பிடிக்கும் போகும் போது பாட்டு பாடி கொண்டு இருப்பார். அப்படித்தான் இந்த நிகழ்ச்சியில் இவருடைய அம்மாவும், மாமாவும் இவரை கலந்து கொள்ள வைத்தார்கள்.

நாகர்ஜுனா குறித்த தகவல்:

அதேபோல் சிறு வயதில் இருந்து இவருடைய அப்பாவுக்கு தன் மகன் பாடகராக வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், கடலுக்குள் மீன் பிடிக்கப் போன அவருடைய அப்பா திரும்பவே வரவில்லை. நாகர்ஜுனா ஆறாம் வகுப்பு படிக்கும் போது தான் அவருடைய தந்தை இறந்து இருக்கிறார். அதற்கு பிறகுதான் நாகர்ஜுனா வாழ்க்கை வெறுத்துப் போய் இருக்கிறார். இருந்தாலும், எப்படியோ பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.

-விளம்பரம்-

நாகர்ஜுனா குடும்பம்:

அதற்கு பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மீன் பிடிக்க சென்றிருக்கிறார். இவருக்கு அக்கா, தங்கை இருக்கிறார்கள். அவர்களுடைய திருமணத்தையும் நாகர்ஜுனா செய்து வைத்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் இவருக்கு சரிகம நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், இந்த நிகழ்ச்சி மூலம் நாகர்ஜுனாவுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய சோகமான வாழ்க்கை குறித்து நாகர்ஜுனா பேசியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாகர்ஜுனா பதிவிட்ட வீடியோ:

அதில் அவர், இந்த நிகழ்ச்சியில் எப்படி கலந்து கொள்வேன் என்று ஆரம்பத்தில் யோசித்தேன். குடும்ப சூழ்நிலைக்காக தான் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இப்போது மக்கள் மத்தியில் எனக்கு பிரபலம் கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது. வெளியே செல்லும்போது பார்ப்பவர்கள் எல்லோருமே என்னை சொந்தக்காரராக, உறவினர்கள் போல நடத்துகிறார்கள். எப்படியோ போராடி பாட்டு முறைப்படி தெரியாமலேயே முயற்சியால் இந்த நிகழ்ச்சிக்கு அனைவர் உடைய மனதை வென்று வந்துவிட்டேன். கண்டிப்பாக என்னுடைய அப்பாவின் ஆசை நிறைவேற்றுவேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement