சரிகமப நிகழ்ச்சியில் ட்ராகன் பட நடிகைக்கு சிறுவன் முத்தம் கொடுத்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. வருடம் வருடம் வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் பல வருடமாக விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
🤦♂️🤦♂️🤦♂️
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 18, 2025
pic.twitter.com/KbZVlDlTU6
இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதேபோல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாடல் நிகழ்ச்சி தான் சரிகமப. இந்த நிகழ்ச்சிக்கும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது. வழக்கம்போல் அர்ச்சனா தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.
சரிகமப நிகழ்ச்சி:
இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்ற இரண்டு பிரிவுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்தது. தற்போது ஜூனியர் கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் டிராகன் படகு குழுவினர் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் சிறுவன் ஒருவன், 100 வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் என்ற பாடலை பிரமாதமாக என்ற பாடலை பாடி இருந்தார்.
சிறுவன் செய்த வேலை:
அதற்குப்பின் அந்த சிறுவன், டிராகன் பட நடிகைக்கு உதட்டிலேயே முத்தம் கொடுக்க பார்த்தார். அவருமே கண்ணமெல்லாம் காண்பித்துமே விடாமல் அந்த சிறுவன் அந்த நடிகைக்கு உதட்டில் தான் முத்தம் கொடுத்தார். இதை பார்த்து அங்கிருந்து எல்லோருமே ஷாக் ஆனார்கள். குறிப்பாக, எஸ்.பி.பி சரண் ரொம்பவே ஷாக் ஆகிவிட்டார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் ரன்னிங் ஆகி வருகிறது. இதை பார்த்த பலருமே விமர்சித்தும், கிண்டல் செய்தும் வருகிறார்கள்.
பிரதீப் ரங்கநாதன் திரைப்பயணம்:
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருந்தவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து இவர் லவ் டுடே என்ற படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடிக்கிறார்.
டிராகன் படம்:
இதை அடுத்து இவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகை கயாடு கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் வேற யாரும் இல்ல, மலையாளத்தில் மேலாடை அணியாமலேயே படு கவர்ச்சியாக நடித்திருந்தார். தற்போது இவர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக டிராகன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவர்களுடன் மிஸ்கின், சித்து, கௌதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் அடுத்த மாதம் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வெளிவர இருக்கிறது.