சர்கார் “Audio Launch-ல்” கலந்துக்க “Ticket” வேண்டுமா..! அப்போ இதை செய்யுங்கள்.!

0
337
vijay

விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் தயாராகி வரும் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடைபெற உள்ளது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.

மேலும், இசை வெளியிட்டு விழா முன்பாக வரும் வரும் செப்டெம்பர் 24 ஆம் தேதி மாலை 6 மணிக்கு “சர்கார்” படத்தின் சிங்கள் டிராக் ஒன்று வெளியாகவுள்ளது என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

இந்நிலையில் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பங்கேற்க சன் பிச்சர்ஸ் போட்டி ஒன்றை வைத்துள்ளது. அது என்னவெனில், அடுத்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்சயிகளில் இடையை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு கேள்விகேட்கப்படும். ஒருவர் எத்தனை கேவிகளுக்கு வேண்டுமானாலும் பதிலளிக்கலாம், அந்த கேள்விக்கு சரியான விடை அளிக்கும் 250 பேர் தேர்ந்துடுக்கப்படுவார்கள்.

அப்படி தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பும், சென்னைக்கு வந்து செல்ல விமான டிக்கெட்டும், பயணச்செலவு 2000 ரூபாயும் வழங்கப்படும் என்று சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.