விஜய்யின் அரசியில் பேச்சு..! பத்திரிக்கையாளர்ளிடம் முதலமைச்சர் அதிரடி கருத்து

0
208
Sarkar

இளையதளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் அரசியல் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sarkar

இந்த விழாவில் பேசிய விஜய்,தமிழ் நாட்டை நல்லவர்கள் ஆள வேண்டும் என்றும், நான் முதலமைச்சராக வந்தால் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்றும் ஒரு வேலை நான் முதல்வராக வந்தால் முதல் வேலையாக ஊழலை ஒழிப்பேன் என்றும் பேசி இருந்தார்.

நடிகர் விஜய் பேசியதை வைத்து பார்க்கும் போது அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் முடிவே செய்து விட்டனர். மேலும், நடிகர் விஜயின் பேச்சுக்கும் பல்வேறு அரசியல் கட்சினரும் தங்களுது விமர்சனத்தை முன்வைத்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமீ விஜய் பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

yedappadi

அதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனி, இது ஒரு ஜனநாயக நாடு, இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம் என்று கூறியுள்ளார். பல்வேறு அரசியல் பிரமுகர்களும் விஜய் பேசியதை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனி விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளது போல தெரிகிறது.