தமிழ் சினிமா வரலாற்றிலேயே சர்கார் படம் செய்த சாதனை….!ரஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய்..!

0
1339
Sarkar
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த ‘சர்கார் ‘ படம் தீபாவளி திருநாளான நேற்று (நவம்பர் 6)உலகெங்கும் உள்ள 3500 திரையரங்கிற்கு மேல் வெளியானது.

-விளம்பரம்-

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சங்களை பெற்று வருகிறது. பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை விஜய் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்துடன் கட்னு கழித்தனர்.

- Advertisement -

தீபாவளி பண்டிகை என்பதால் குடும்ப ரசிகர்களும் தியேட்டரில் அலை மோதினர். தமிழகத்தில் பல்வேறு திரையரங்கிகளில் வெளியான இந்த படம் நேற்று மட்டும் கலக்ஷனில் அள்ளியுள்ளது.

குறிப்பாக சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் வெளியான இந்த படம் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த படங்களிலேயே ஒரு நாளிலேயே 2 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது சர்கார் திரைப்படம். இதற்கு முன்பாக ரஜினியின் ‘காலா’ திரைப்படம் ஒரே நாளில் 1.76 கோடி வசூல் செய்தது தான் சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement