பாகுபலி சாதனையை நெருங்கியது சர்க்கார் வியாபாரம்..!தளபதி மாஸ்..!

0
317
sakar

தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக சர்க்கார் படத்தில் இணைந்திருக்கிறார்கள் . இதற்க்கு முன் இவர்களது கூட்டணியில் உருவான துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றியை ஈட்டியது.

இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அடிக்கடி “சர்கார்” படத்தின் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இதனால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே போகிறது.

பொதுவாக விஜய் படம் என்றாலே அதன் வியாபாரம் படு ஜோராக நடந்து விடும். அந்த வகையில் “சர்கார்” படம் “பாகுபலி 2 ” திரைப்படத்திற்கு இணையாக வியாபாரம் ஆகிவருவதாக பிரபல ரோகிணி திரையரங்கின் உரிமையாளர் ரேவந்த் சரண் தனது ட்விட்டரி பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த படத்தின் கமெர்சியல் வியாபாரம் பாகுபலிக்கு இணையாக ஆகியுள்ளது என்றும், இத்திரிலிருந்தே விஜய்க்கு இருக்கும் ஒரு அடையாளத்தை நிரூபித்துள்ளது. கண்டிப்பாக இந்த படத்தில் வினயோகிஸ்தர்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் ரேவந்த் சரண் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்