வரலாற்றிலேயே இது தான் முதன் முறை ..!கேரளாவில் சாதனை படைத்த சர்கார்..!

0
260
sarkar

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

கேரளாவில் நடிகர் விஜக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதற்கு சான்றாக சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு பகுதிக்கு இளைய தளபதி நகர் என்று பெயர்வைத்துள்ளனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.இந்நிலையில் தற்போது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் சர்கார் திரைப்படமும் சாதனை படைத்துள்ளது.

கேரளாவில் உள்ள கோட்டயம் பகுதியில் இருக்கும் 5 திரையரங்குகளில் ‘சர்கார்’படத்தின் ரசிகர் காட்சிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்த பகுதியில் எந்த ஒரு திரைப்படமும் 5 ரசிகர் காட்சிகள் திரையிடபட்டதில்லை என்பது குறிப்பிடதக்கது.

இதன் மூலம் கோட்டயம் பகுதியில் 5 ரசிகர் காட்சிகள் திரையிடபட இருக்கும் முதல் பெருமையை நடிகர் விஜய் பெற்றிருக்கிறார்.இந்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் IFAR நிறுவனம் உறுதி செய்துள்ளது.