ஒட்டுமொத்த சர்கார் படக்குழுவின் கேரளா வெள்ளத்தின் நிதி உதவியின் மதிப்பு இத்தனை கோடியா.?

0
347
Sarkar Villian

Ottumotha Sarkar padakuluvin Kerala vellathin nithi uthaviin ethanai kகடந்த 10 நாளைக்கு மேலாக கேரளாவில் பொழிந்து வந்த கனமழை கேரள மாநிலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது. கேரள மக்களுக்கு உதவும் வகையில் தமிழக மக்களிடம் இருந்து பல்வேறு நிதியுதவிகளும், நிவாரண பொருட்களும் நீண்ட நாட்களாக அனுப்பபட்டு வருகிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழ் திரைப்பட கலைங்களர்களும் பல்வேறு நிதியுதவிகளை செய்து வருகின்றார். இதில் நடிகர்களில் அதிகப்படியாக நடிகர் விஜய் 70 லட்ச ரூபாய் நிதியுதவியை கேரளாவில் உள்ள தனது ரசிகர் மன்றம் மூலமாக அனுப்பினார்.

Sarkar

மேலும், நடிகர் விஜய் தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சம்மந்தபட்ட படகுழு கேரள மக்களுக்கு நிதியுதவியினை அளித்துள்ளனர். அதில் யார், எவ்வளவு நிதியுதவியை அளித்துள்ளார்கள் என்பதை கீழே காணலாம்.

சர்கார் படக்குழு அளித்த நிதியுதவி விவரம்

* சன் பிக்சர்ஸ் நிறுவனம்(சர்கார் படத்தின் தயாரிப்பு நிறுவனம்) – 1 கோடி

* நடிகர் விஜய் – 70 லட்சம்

* நடிகை கீர்த்தி சுரேஷ் – 10 லட்சம்

* இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் – 10 லட்சம்