பேட்ட, விஸ்வாசத்துக்கு மத்தியில் மாஸ் காட்டிய விஜய்.! சர்கார் ஹவுஸ்புல்.!

0
1280
Petta-vs-viswasam-vs-sarkar
- Advertisement -

சூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் தான் கடந்த மூன்று வாரங்களாக திரையரங்குகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு மத்தியில் விஜய்யின் சர்கார் திரைப்படமும் மாஸ் காட்டியுள்ளது.

-விளம்பரம்-

துப்பாக்கி, கத்தி போன்ற படங்களை தொடர்ந்து இயக்குனர் முருகதாஸுடன் மூன்றாவது முறையாக ‘சர்கார்’ படத்தின் மூலம் கூட்டணி அமைத்தார் விஜய். மெர்சல் திரைப்படத்தைப் போன்றே ரிலீசுக்கு பிறகு இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இதையும் பாருங்க : சர்கார் 100,விஜய் 63 பற்றி ட்வீட் செய்த பிரபல திரையரங்கம்.! ரசிகர்கள் கொண்டாட்டம்.! 

- Advertisement -

இதனால் சுமாராக ஓடிய இந்த படம் சூப்பர் ஹிட் அடைந்தது. சூப்பர் ஹிட் அடைந்ததோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளையும் படைத்தது. படம் வெளியாகி 83 நாட்கள் ஆன நிலையிலும் வெளிநாட்டில் இப்படம் சமீபத்தில் ஹவுஸ்புள் அடைந்துள்ளது.

பிரான்சில் வெளியான சர்கார் படம் கடந்தாண்டு வெளியான படங்களிலேயே அதிக பார்வையாளர்களை கொண்ட படமாக முதலிடத்தில் உள்ளது. பிரான்ஸ் நாட்டில் தமிழ்ப் படங்களின் வெற்றி, தோல்வி, கலெக்‌ஷன் குறித்து அறிவிக்கும் EOY ENTERTAINMENT நிறுவனம் இத்தகவலை முன்பு வெளியிட்டிருந்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த படம் வெளியாகி கடந்த 27 ஆம் தேதியோடு 83 நாட்கள் ஆன நிலையிலும் இப்படத்தைக்கான 200 கும் மேற்பட்டோர் திரையரங்கிற்கு வந்துள்ளனர் என்பதை EOY ENTERTAINMENT நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லை
பிரான்சில் வெளியான சர்கார் படம் கடந்தாண்டு வெளியான படங்களிலேயே அதிக பார்வையாளர்களை கொண்ட படமாக முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement