சர்கார் 100,விஜய் 63 பற்றி ட்வீட் செய்த பிரபல திரையரங்கம்.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!

0
1083
- Advertisement -

மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லீ விஜய் கூட்டணியில் விஜய் 63 படம் உருவாக உள்ளது. தெறி,மெர்சல் படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக இணைகிறது இயக்குனர் அட்லீ மற்றும் விஜய் கூட்டணி.

-விளம்பரம்-

பிரமாண்ட பொருட்செலவில் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பூஜையுடன் நேற்று (ஜனவரி 20)தொடங்கியது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

- Advertisement -

மேலும், விவேக், ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பூஜை புகைப்படங்களும், விடீயோக்களும் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தை பற்றி பிரபல வெற்றி திரையரங்கம் கொண்டாட்டமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த திரையரங்கில் சர்கார் படத்தின் 100வது கொண்டாடட்டம் விரைவில் நடைபெற இருப்பதாக ட்வீட் செய்துள்ளனர். மேலும், விஜய் 63 பற்றிய அறிவிப்பையும் விரைவில் வெளியிடபோவதாவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement