சர்கார் படத்தில் “OMG Ponnu” பாடலை பாடியது இவரா..! செம கியூட்டா இருக்காங்க.!

0
1696
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார்” திரைப்படம் வரும் தீபாவளியன்று வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி படு கோலாகலமாக கொண்டாடபட்டது. இந்த விழாவில் சர்கார் படத்தின் 5 பாடல்களும் வெளியிடபட்டது.

-விளம்பரம்-

Jenitha

- Advertisement -

இந்த படத்தில் “OMG பொண்ணு ” என்ற பாடல் இக்கால இளசுகள் சமூக வலைதளத்தில் பயன்படுத்தும் சில வார்த்தைகளை பயன்படுத்தி வெளியாகியுள்ள பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஜோனிதா காந்தி என்பவர் பாடியுள்ளனர்.

இளசுகளின் புதிய க்ரஷாக இருந்து வரும் ஜோனிதா காந்தி இந்தியாவில் பிறந்து கனடா நாட்டில் வளர்ந்தவர். எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயர் படிப்பை முடித்துள்ள இவர், சிறு வயது முதலே இசை மீது ஆர்வம் கொண்டவர். பிரபல இந்தி பாடகர் சோனு நிகம் இசை நிகழ்ச்சியில் பாடி பின்னர் சினிமா துறையில் பாடகராக வாய்ப்பு தேடி இந்தியாவிற்கு வந்தார்.

-விளம்பரம்-

jonita

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான “சென்னை எக்ஸ்பிரஸ்” என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகில் பாடகியாக அறிமுகமானார். அதன் பின்னர் இவரது குரல் ஏ ஆர் ரகுமானிற்கு பிடித்துப்போக அவரது “highway” இசை ஆல்பத்தில் பாடும் வாய்ப்பினை அளித்தார்.

gandhi-jonita

jonita-gandhi

அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு வெளியான “ஓ காதல் கண்மணி” என்ற படத்தில் “மெண்டல் மனதில்” என்ற பாடலை பாடி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் ஜோனிதா காந்தி. இதுவரை ஏ ஆர் ரகுமான் இசையில் “24,காற்று வெளியிடை” போன்ற படங்களில் பாடியுள்ளார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு “சர்கார்” படத்தின் மூலம் ஏ ஆர் ரகுமான் இசையில் பாடியுள்ளார் ஜோனிதா காந்தி.

Advertisement