இதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …!விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..!

0
413
Sarkar

தமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி யார் என்பதற்காக போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது இருக்கிறது. ரஜினி படங்களுக்கு ஈடாக தற்போது விஜய் படங்களும் அணைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் ரஜினி படம் செய்த சாதனையை தூக்கி சாப்பிட்டுள்ளது விஜய்யின் சர்க்கார்.

Sarkar teaser

தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக சர்க்கார் படத்தில் இணைந்திருக்கிறார்கள் . இதற்க்கு முன் இவர்களது கூட்டணியில் உருவான துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றியை ஈட்டியது.

வரும் தீபாவளியன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் வியாபாரம்படு ஜோராக நடந்து வருகிறது. இந்த படத்தின் ஓவர்சீஸ் வியாபாரத்தில் அதாவது வெளிநாட்டு வெளியிட்டு உரிமம் மட்டும் ரூ 25 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

தற்போது வந்த தகவலின்படி “சர்கார்” படத்தின் ஓவர்சீஸ் வியாபாரத்தில் அமெரிக்காவில் மட்டும் . 4.1 கோடிக்கு ரூபாய்க்கு விலைபோனதாக கூறப்படுகிறது. இதுவரை ரஜினி படம் கூட அமெரிக்காவில் இந்த தொகைக்கு விலை போனது கிடையாதாம்.