ஓவர்சீஸ் வியாபாரத்தில் இத்தனை கோடிக்கு வியாபாரமா…? சர்கார் செய்த சாதனை

0
698
Sarkar
- Advertisement -

தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக சர்க்கார் படத்தில் இணைந்திருக்கிறார்கள் . இதற்க்கு முன் இவர்களது கூட்டணியில் உருவான துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றியை ஈட்டியது.

-விளம்பரம்-

Sarkar

- Advertisement -

வரும் தீபாவளியன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்றது. மேலும், இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அடிக்கடி “சர்கார்” படத்தின் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது.

தற்போது வெளிவந்துள்ள செய்தி, விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அது என்னவெனில் சர்கார் திரைப்படத்தின் ஓவர்சீஸ் வியாபாரத்தில் அதாவது வெளிநாட்டு வெளியிட்டு உரிமம் மட்டும் ரூ 25 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

-விளம்பரம்-

Sarkar

அதே போல இந்த படத்தில் தமிழக வெளியிட்டு உரிமத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும். உலகம் முழுவதும் வெளியிட அவர்கள் கொடுத்து வாங்கியுள்ள விலை ஏறத்தாழ ரூ. 100 கோடி எனவும் ஏற்கனவே சில தகவல்களும் வெளியாகி இருந்து.

மேலும்,“சர்கார்” படத்தின் கேரள வெளியிட்டு உரிமம் 9 கோடி ரூபாய்க்கு பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. எனவே, படம் வெளியாவதற்கு முன்பாகவே படத்தின் வியாபாரம் சூடு பிடித்துள்ளதை எண்ணி பட குழுவினரும் சன் குழுமமும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement