ஹைத்ராபத்தில் “சர்காரின்” ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்..!விளக்கமளித்த பி ஆர் ஓ ..!

0
579
Sarkar
- Advertisement -

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு மிகவும் எதிர்பார்க்கபடும் படம் என்றால் அது “சர்கார்” தான். இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துள்ள இந்த படத்தின் டீஸர் வெளியானத்திலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு கூடியுள்ளது.

-விளம்பரம்-

கடந்த 19 ஆம் தேதி வெளியான இந்த டீஸர் சமூக வலைத்தளத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. மேலும், படத்தின் அணைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் ஒரு சில போஸ்ட் ப்ரொடஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

மேலும், தமிழ், தெலுங்கு மலையாளம் என்று அனைத்து மொழியிலும் வெளியாக இருக்கும் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் இந்த மாதம் 29 ஆம் தேதி ஹைத்ராபாத்தில் நடைபெற இருக்கிறது என்றும் அதற்காக நடிகர் விஜய் ஹைத்ராபாத் செல்ல இருக்கிறார் என்றும் சில செய்திகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.

ஆனால், இந்த செய்தியை மறுத்து “சர்கார்” படத்தின் பி ஆர் ஓ வான டைமண்ட் பாபு ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் சர்கார் படத்தின் விழாவிற்காக நடிகர் விஜய் ஹைதராபாத் செல்கிறார் என்று தவறான செய்தி பரவி வருகிறது. அது முற்றிலும் அடித்தளமில்லாத ஒரு பொய்யான செய்தி அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement