கசிந்தது சர்கார் படத்தின் புதிய லுக்..! புகைப்படத்தில் இதை கவனித்தீர்களா..?

0
268

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் “சர்கார்” படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதுபோக இந்த படத்தின் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வளம் வந்து கொண்டிருக்கிறது.

Sarkar

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத் குமார், ராதாரவி, கருபழனியப்பன் போன்றவர்கள் நடித்துள்ளனர். அது போக இந்த படத்தில் 90 நடிகையான துளசியும் நடித்துள்ளார் என்பது சம்மீப்தில் வெளியாகியுள்ள புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடிகை துளசி, நடிகர் விஜய்யின் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய்யின் தோளில் கைவைத்தவாறு போஸ் கொடுத்திற்குக்கும் நடிகை துளசியின் விரலில் தேர்தல் வாக்களிப்பில் போது வைக்கப்படும் மை இருக்கிறது. இதனை வைத்து பார்க்கும் போது சர்கார் படத்தில் தேர்தல் நடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதா என்ற கேள்வி எழிந்துள்ளது.

Sarkar

இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்து வருகிறாராம். வெளிநாட்டில் பிரபல தொழிலதிபராக இருந்து வரும் விஜய் தமிழ் நாட்டில் நடக்கும் தேர்தலின் போது வாக்களிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு செல்கிறார். அவர் சொந்த ஊருக்கு செல்வதற்குள் அவருடைய வாக்கினை சில அரசியல் கட்சியினர் கள்ள ஒட்டாக பதிவிட்டிருப்பது விஜய்க்கு தெரியவருகிறது,

இதனை என்னவென்று விசாரிக்கும் போது அரசியல் கட்சியினருக்கும், நடிகர் விஜய்க்கும் பிரச்சனை ஏற்பட, அரசியலில் குதிக்கிறார் நடிகர் விஜய். பின்னர் அரசியலில் குதித்து முதல்வராகி விடுகிறாரார் என்று ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படத்தில் மூலம் தேர்தல், அரசியல் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்றும் அதில் நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலில் நின்று வில்லன்களை எதிர்க்கும் ஒரு அரசியல் தலைவராக இருப்பார் என்று ஊர்ஜிதமாகியுள்ளது.