தமிழ் ராக்கர்ஸ் என்ற திருடனை வெல்ல விட மாட்டோம்..!ஒன்றுகூடிய தயாரிப்பாளர்கள் சங்கம்..!

0
867
Sarkar
- Advertisement -

ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார் திரைப்படம் நாளை தீபாவளி பண்டிகை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

-விளம்பரம்-

இந்தப் படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று சன் நெட்வொர்க் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அம்மனுவில், 3 ஆயிரத்து 710 இணையத்தளங்களின் பெயர்களை குறிப்பிட்டு அந்த இணையதளங்களை முடக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சர்கார் படத்தின் ஹெச்.டி பிரிண்ட் விரைவில் இணைதளத்தில் வெளியிடப்படும் என தமிழ்ராக்கர்ஸ் பெயரில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியிலும், திரைப்பட உரிமையாளர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதயடுத்து சர்கார் படத்தை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க தமிழ் நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒன்று கூடி சர்கார் படம் திருட்டு தனமாக இணையத்தில் வெளியாகாத வண்ணம் சில முடிவுகளை எடுத்துள்ளது.

-விளம்பரம்-

Sarkar

தற்போது அந்த கடிதத்தின் விவரமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் சர்கார் படத்தை hd தரத்தில் வெளியிடுவேன் என்று சவால் விட்ட தமிழ் ராக்கர்ஸ் என்ற திருடனை வெல்லவிட மாட்டோம் என்று ஒன்றுகூடியுள்ளனர்.

Advertisement