நாங்கள் என்ன முட்டாளா.? விஜய் சர்கார் போஸ்டருக்கு ஆதரவாக பிரபல இயக்குனர் அதிரடி.!

0
769

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “சர்கார் ” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போல இருந்ததால் பல்வேறு தரப்பினரும் நடிகர் விஜய்க்கு எதிராக கொடி பிடிக்க துவங்கினர்.

sarkar

மேலும், புகை பிடித்தபடி உள்ள விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும், சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்று நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு பொதுசுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து ‘சர்கார்’ படத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்த பர்ஸ்ட் லுக் புகைப்படம் மாற்றப்பட்டது.

விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்த இந்த செயல் குறித்து பல்வேறு ரசிகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழில் 2013 ஆம் ஆண்டு வெளியான “மூடர் கூடம் ” படத்தை இயக்கிய இயக்குனர் நவீன், “சர்கார் ” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளது என்னவெனில் “முதலில் நாம் ஒரு பொது மனிதனின் அறிவை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். ஒரு பொது மனிதனுக்கு தன்னிச்சையாக முடிவெடுக்க கூடிய அளவிற்கு அறிவு இருக்கிறது. ஒரு மாஸ் ஹீரோவை பார்த்துவிட்டு புகைபிடிக்கும் அளவிற்கு அவர்கள் முட்டாள் அல்ல. குடிப்பழக்கம் சினிமா வருவதற்கு முன்பே நாகரிகத்திற்கு வந்து விட்டது. ஒரு பிரபலத்தை மட்டும் இலக்காக வைப்பது ஏன் ?” என்று அந்த பதிவில் சர்கார் படத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார்.