சர்கார் படத்தை பார்த்துவிட்டு வெளிநாட்டில் இருந்து வெளியான விமர்சனம்..!படம் எப்படி உள்ளது..!

0
2
Sarkar
- Advertisement -

இயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள சர்கார் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படம் நாளை மறுநாள் தீபாவளி அன்று உலக அளவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது படம் எப்படியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சர்கார் படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், துபாயில் தணிக்கை குழுவின் முக்கிய உறுப்பினரான உமைர் சந்து என்பவர் சர்கார் படத்தை பார்த்துவிட்டு சிறிய விமர்சனம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், சர்கார் படம் மிகவும் அற்புதமாக உள்ளது என்றும் படம் முழுக்க நடிகர் விஜய் மாஸ் வசனங்களை தெறிக்கவிட்டுள்ளார் என்றும், படத்தின் கதை, திரைக்கதை, ஆக்க்ஷன் காட்சிகள் அனைத்திலும் விஜய் மிரட்டியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும், படத்தில் விஜய்யின் என்ட்ரியும், முதல் பாதி மிகவும் அசத்தலாக உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார். எனவே, படம் சூப்பர் ஹிட் என்பதிலும் மிகவும் ஐயமில்லை என்று உறுதியாகியுள்ளது. இந்த விமர்சனத்தை கேட்டு விஜய் ரசிகர்கள் அணைவரும் குஷியாகியுள்ளனர்.

Advertisement