சர்கார் போஸ்டர் கிழிப்பு..!போராட்டத்தை துவங்கிய அதிமுக..!காட்சிகள் ரத்து..!

0
281
Sarkar

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்திற்கு அரசியல் கட்சியின் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. படத்தில் சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக கட்சியினர் மதுரை மற்றும் கோவையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Santhitheater

மதுரையில் போராட்டத்தை நடத்திய அதிமுக சர்கார் படத்தை திரையிடகூடாது என்று போராட்டம் நடத்தினர். இதனால் மதுரையில் உள்ள மூன்று முக்கிய திரையரங்குகளில் 2 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டு மாலை 4.30 மணிக்கு காட்சிகள் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் கோவை ரயில் நிலையம் அருகே சாந்தி திரையரங்கில் ஓட்டபட்டிருந்த சர்கார் படத்தின் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் ஆகியவற்றை அதிமுகவினர் கிழிந்தனர். மேலும், திரையரங்கை முற்றுகையிட்ட அதிமுகவினர், முருகதாஸ் மற்றும் விஜய் ஒழிக என்ற கோஷங்களையும் முழங்கி வருகின்றனர்.

சர்கார் படத்தை திரையிடகூடாது என்று அதிமுகவினர் போராடி வந்தாலும் கோவையில் சர்கார் படத்தின் எந்த ஒரு காட்சிகளும் ரத்து செய்யபடவில்லை என்பது விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலான விடயமாக அமைந்துள்ளது.