சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் பற்றிய வெளிவந்த சூப்பர் தகவல்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

0
421
Sarkar

விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் தயாராகி வரும் ‘சர்கார்’ படத்தின் அப்டேட்டை நீண்ட நாட்களாக வெளியிடாமல் இருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். கடந்த ஜூன் 22 ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட பிறகு பின்பு எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 25) ‘சர்கார்’ படத்தின் இசை வெளியிட்டு தேதியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். மேலும், தற்போது விஜய் ரசிகர்களுக்கு அடுத்து ஒரு சிறப்பான அப்டேட்டை அளித்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அதாவது அடுத்த அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ‘சர்கார்’ படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற உள்ளது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அதற்கு முன்பாக வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி இந்த படத்தில் இருந்து ஒரே ஒரு பாடலை மட்டும் வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டு வருகிறது.

ஏற்கனவே ‘சர்கார்’ படத்தின் விளம்பர பணிகளை துவங்கிவிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து 5 நாட்களுக்கு ‘சர்கார்’ படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் வெளியிடப்போவதாகவும். தினமும் ஒரு புகைப்படம் என்று தொடர்ந்து 5 நாட்களுக்கு ஒவ்வொரு புகைப்படமாக வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்த தகவல் ரசிகர்களுக்கு மேலும் ஒரு கொண்டாட்டமாய் அமைந்துள்ளது.