அப்பா விஜய்யை போல மகள் கொடுத்த சர்கார் லுக்.! வைரலாகும் புகைப்படம் இதோ .!

0
68
Divya-Saasha
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார். நடிகர் விஜய்க்ககு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் நடிகர் விஜய்க்கு, சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்று மகளும் பிறந்தனர். இவர்கள் இருவருமே விஜய்யின் படத்திலும் சிறு வேடங்களிலும் நடித்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

sarkar 2
சர்க்கார்

நடிகர் விஜய் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் பெரும்பாலும் தனது குடும்பத்தாருடனே நேரத்தை செலவழிப்பார். குறிப்பாக தனது பிள்ளைகளுக்காக அணைத்து வசதிகளையும் செய்து தந்துவிடுவார் விஜய். தனது மகள் ஒரு பேட்மின்டன் வீராங்கனை என்பதால் நீலாங்கரையில் புதிதாக கட்டி வரும் வீட்டில் தனது மகளுக்காக வீட்டின் உள்ளேயே பேட்மின்டன் ஆடுகளத்தை கூட கட்டிவருகிறார் விஜய்.

பேட்மின்டன் மட்டும் இல்லாமல் ஷாஷா ,தனது பாட்டி ஷோபாவை போலவே சங்கீத்திலும் கொஞ்சம் ஞானம் உடையவராக இருக்கிறார். அதனால் அடிக்கடி பாடவும் செய்வராம், இந்த தகவலை விஜயின் அம்மா ஷோபா ஏற்கனவே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜய்யின் மகள் ஷாஷா, கீ போர்ட் வாத்தியத்தை வாசிக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

Sasha

ஷாஷாவின் அந்த புகைப்படத்தில் சமீபத்தில் வெளியான ‘சர்கார் ‘ படத்தின் இரண்டாவது போஸ்டரில் நடிகர் விஜய், காரில் அமர்ந்தவாறு கையில் லெப்டாபுடன் போஸ் கொடுத்திருப்பதை போன்றே ஷாஷாவும் அந்த புகைப்படத்தில் மாஸாக போஸ் கொடுத்துள்ளார். ஷாஷாவின் இந்த புகைப்படம் விஜய் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டு வருகிறது.

Advertisement