லாஸ் வேகாஸீலிருந்து வெளியான சர்கார் படத்தின் “Song Shooting spot Still”..! வேற லெவல் புகைப்படம்.!

0
389
Sarkar-Dance

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘சர்கார் ‘ படத்தின் படப்பிடிப்புகள் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் முதல் பாடல் குறித்த ஹாட் தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

பொதுவாக விஜய் படத்தில் வரும் முதல் பாடல் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருவார்கள். அந்த வகையில் ‘சர்கார் ‘ படத்தின் முதல் பாடலை நடன இயக்குனர் ஷோபி தான் நடனமைதுள்ளாராம். இந்த படத்திற்கான முதல் பாடல் தற்போது அமெரிக்கா, லாஸ் எஞ்சல்ஸ் நகரில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த பாடலின் நடன இயக்குனராக பணியாற்றி வரும் ஷோபி, விஜயுடன் பல்வேறு படத்தில் பணியாற்றியுள்ளார். கடைசியாக விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடலுக்கு நடனமமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பை பெற்றது என்பதும் அனைவருக்கும் தெரியும்.

sarkar

dancer

அதே போல ‘சர்க்கார்’ படத்தின் முதல் பாடல் ஒரு ஸ்டைலிஷ் பாடலாக இருக்கும் என்றும், அந்த பாடலில் நடிகை வரலட்சுமியும், விஜயுடன் நடனமாடியுள்ளார் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது இந்த பாடல் அமெரிக்கா நகரில் படமாகப்பட்டுள்ளதை உறுதி செய்யும் விதமாக சர்கார் படக்குழு தங்களது ட்விட்டர் பக்கத்தில் ‘லாஸ் எஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ‘சர்கார்’ படத்தின் பாடல் படப்பிடிப்பில் நடனமாடியுள்ளனர்’ என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.