இங்க வாய்பின்றது அவ்ளோ சீக்கிரம் கெடச்சிட்ரதில்லை – நிஜ வாழ்க்கையிலும் இவர் நிலை இதானாம்.

0
5216
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. இந்த படத்தில் ஒரு சில காட்சிகள் நடித்தவர்கள் கூட ரசிகர்களால் மறக்க முடியாதபடி நடித்து இருந்தனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்த படத்தில் ஆர்யாவின் நண்பராக கெளதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரையும் பலரும் பாராட்டி வருகின்றனர். அதிலும் இவர் இந்த படத்தில் பேசிய ‘இங்க வாய்பின்றது நமக்கெல்லாம் அவ்ளோ சீக்கிரம் கெடச்சிட்ரது கிடையாது. இது நம்ம ஆட்டம், நீ ஏறி ஆடுடா இது நம்ம காலம் பாத்துக்கலாம்’ என்ற இவரது வசனம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வரை வைரலானது.

இந்த வசனம் இவரது சொந்த வாழ்விற்கும் கச்சிதமாக பொருந்தியுள்ளது. இவர் 12 ஆண்டுக்கும் மேலாக சினிமாவில் நடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறாராம். அட்டகத்தி படத்தில் கூட இவர் தான் ஹீரோவாக நடிப்பதாக இருந்ததாம். அதே போல காலா படத்திலும் ரஜினியின் கடைசி மகனான லெனின் கதாபாத்திரத்திலும் இவர் தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால், அதுவும் கடைசி நேரத்தில் கை நழுவி போய்விட்டதாம். அவரது முழு பேட்டியை வீடியோவில் காணுங்கள்.

-விளம்பரம்-
Advertisement