‘சார்பட்டா’ படத்தில் ரங்க வாத்தியார் மனைவியாக நடித்த இவர் யார் தெரியுமா ? தெரிஞ்சா அசந்துடுவீங்க.

0
1772
geetha
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 201912110204392734_KB-sir-never-asked-if-I-wanted-to-act-Geetha-Kailasam_SECVPF.gif

சூப்பர் ஹிட் அடித்த சார்பட்டா :

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று இருந்தனர். அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து இருந்தது. இந்த படத்தில் ஒரு தீவிர தி மு க தொண்டனாக நடித்து இருந்தார் பசுபதி.

- Advertisement -

ரங்கன் வாத்தியார் மனைவி :

மேலும், இந்த படத்தில் ஆண் கதாபாத்திரங்களுக்கு இணையாக பெண் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் இந்த படத்தில் பசுபதியின் மனைவியாக நடித்துள்ள கீதா கைலாசம் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ் திரையுலகில் இயக்குநர் சிகரம் என புகழப்பட்ட கே.பாலச்சந்தர் அவர்களின் மகன் கைலாசத்தின் மனைவி கீதா கைலாசம் தான் இவர்.

கே பாலச்சந்தர் குடும்பம் :

அதாவது இவர் கே.பாலச்சந்தரின் மருமகள். சிறந்த எழுத்தாளரான கீதா கைலாசம், நடிகையாகவும் சார்பட்டா பரம்பரை படத்தில் கலக்கியுள்ளார். தயாரிப்பாளரான இவர் பல்வேரு மேடை நாடங்கங்களை அரங்கேற்றியுள்ளார். மேலும், கே பாலசந்தர் மற்றும் இவரது கணவர் இறந்த பின்னர் அவர்கள் நடத்தி வந்த மின்பிம்பங்கள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

மர்மதேசம், ரமணி Vs ரமணி :

மின்பிம்பங்கள் நிறுவனம் தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிரபலமான சீரியலான மர்ம தேசம், ரமணி vs ரமணி போன்ற பல தொடர்களை தயாரித்ததும் இவரது தலைமை தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு திருமணத்திற்கு முன் இருந்தே நடிக்க வேண்டும் என்பது தான் ஆசையாம். ஆனால், கே பாலச்சந்தர் கூட இவர் நடிக்க விரும்புகிறார் என்பதை கேட்டது கூட இல்லையாம்.

This image has an empty alt attribute; its file name is kattil.jpg
கட்டில் பட புகைப்படங்கள்

முதலில் அறிமுகமான படம் :

இவர் கட்டில் என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகமானார். மேலும், இவர் பல்வேறு மேடை நாடகங்களை எழுதி இயற்றி நடித்தும் இருக்கிறார். இவர் முதன் முதலாக நடித்த ‘கட்டில்’ திரைப்படம் வந்தது கூட யாருக்கும் தெரியாது ஆனால், அதுமிகவும் ஒரு அற்புதமான படம். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement