சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் இன்று வெளியாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார்.
இதையும் பாருங்க : ’சார்பட்டா பரம்பரை’ படத்தில் அனைவராலும் பாராட்டப்படும் நடிகர் – டேன்ஸிங் ரோஸ் யார் தெரியுமா ?
வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் 1975ன் பிற்பகுதியில் நடக்கும் இரண்டு பிரிவுகளுக்கு இடையிலான பாக்சிங் போர் பற்றிய கதை தான். பொதுவாக ரஞ்சித் பாடங்கள் ஜாதி ஆடையாளங்களில் சிக்கிவிடும், ஆனால், இந்த படத்தில் அது இல்லை என்றாலும் மிசா தடைச்சட்டம் ஆட்சி கலைப்பு இனவாதத்தை கடுமையாக சாடிய குத்துச்சண்டை வீரர் முகமது அலி போன்றவற்றின் மூலம் தன்னுடைய அரசியலை பேசியிருக்கிறார் ரஞ்சித்
இருப்பினும் இந்த திரைப்படதிற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பற்றி மிகவும் நல்ல விதமான விமர்சனத்தை கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். மேலும், ரஜினி இனி ரஞ்சித்துடன் படம் எடுக்க அழைக்க வேண்டாம் என்றும் ரஜினியை கேலி செய்து இருக்கிறார் மாறன்.