டேன்ஸிங் ரோஸை எங்கயோ பாத்த மாதிரி இருக்கா ? அட,தமிழில் இப்படி ஒரு சூப்பர் ஹிட் படங்களிலேயே நடித்துள்ளார்.

0
18482
dancing
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படம் 1975ன் பிற்பகுதியில் நடக்கும் இரண்டு பிரிவுகளுக்கு இடையிலான பாக்சிங் போர் பற்றிய கதை தான். பொதுவாக ரஞ்சித் பாடங்கள் ஜாதி ஆடையாளங்களில் சிக்கிவிடும், ஆனால், இந்த படத்தில் அது இல்லை என்றாலும் மிசா தடைச்சட்டம் ஆட்சி கலைப்பு இனவாதத்தை கடுமையாக சாடிய குத்துச்சண்டை வீரர் முகமது அலி போன்றவற்றின் மூலம் தன்னுடைய அரசியலை பேசியிருக்கிறார் ரஞ்சித்.

இதையும் பாருங்க : கழகத்தோட உடன்பிறப்பு நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் – சர்பட்டா பரம்பரையில் வழியும் DMK ரெஃபெரென்ஸ்.

- Advertisement -

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் டான்சிங் ரோஸாக வரும் ஷபீர், கலக்கலான உடல்மொழியுடன் ரிங்கில் இருக்கும்போது ஆர்யாவையும் பின்னுக்குத் தள்ளி மொத்தமாக ஸ்கோர் செய்கிறார்.இவர் ஒரு நாடக கலைஞர். மேலும், ’பார்க்கவுர்’ (Parkour) என்று அழைக்கப்படும் சண்டைக்கலையில் தேர்ந்தவர் என்பதால் அது அவரை டேன்ஸிங் ரோஸ் ஆக நடிப்பதற்கு உதவியிருக்கிறது.

‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்காக முறையாக பாக்ஸிங் பயிற்சி எடுத்திருக்கிறார் ஷபீர். இந்த படத்தில் அவரை பார்த்த பலரும் இவர் புதுமுகம் என்று தான் நினைத்து இருப்பீர்கள். 2014ஆம் ஆண்டு லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகியிருக்கிறார் ஷபீர்.

-விளம்பரம்-

ஜெயம் ரவி நடித்த ‘அடங்க மறு’ படத்தில் கலெக்டரின் மகனாக நடித்து இருப்பார். அதே போல ரஜினி நடித்த பேட்ட படத்திலும் நடித்து இருந்தார். நினைத்தான் ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்தில் நவாசுதீன் சித்திகின் மகனாக, விஜய் சேதுபதியின் சகோதரனாக நடித்திருந்தாலும், ஷபீருக்கு ‘சார்பட்டா பரம்பரை’ மிகப்பெரிய புகழைக் கொடுத்திருக்கிறது.

Advertisement