ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

சார்பட்டா பரம்பரை படத்தில் 1975ன் பிற்பகுதியில் நடக்கிறது கதை. பிரிட்டிஷார் அறிமுகம் செய்த குத்து சண்டை விளையாட்டை ஒரே குழுவாக குத்துச் சண்டையில் ஈடுபட்டு வந்தவர்கள் பின்னர் சார்பட்டா பரம்பரை, இடியப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்ப செட்டியார் பரம்பரை, கரிய பாபுபாய் பரம்பரை என்று பல்வேறு குழுக்களாக பிரிந்து விடுகிறது.

இதையும் பாருங்க : இப்படி ஒரு சூப்பர் படத்தை மிஸ் செஞ்சிட்டாரே இந்த மாஸ் ஹீரோ – போஸ்டர் எல்லாம் கூட வந்திருக்கு பாருங்க.

Advertisement

ஆனால், இந்த குத்துச்சண்டையில் சார் பட்டா பரம்பரையைச் சார்ந்தவர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.ஒரு கட்டத்தில் சார்பட்டா பரம்பரைக்கு இடியப்ப நாயக்கர் பரம்பரைக்கும் மோதல் ஏற்பட்டு விடுகிறது. பின்னர் எந்த பரம்பரை ஜெயித்தது, ஆர்யா யார் பக்கம் நின்றார் என்பது தான் கதை. இந்த படத்தில் எத்தனையோ சண்டை காட்சி வந்தாலும் டான்ஸிங் ரோஸ் தான் பலரின் பேவரைட்டாக மாறி இருக்கிறது.

டான்சிங் ரோஸாக வரும் ஷபீர், கலக்கலான உடல்மொழியுடன் ரிங்கில் இருக்கும்போது ஆர்யாவையும் பின்னுக்குத் தள்ளி மொத்தமாக ஸ்கோர் செய்கிறார். அவருடனான அந்த பாக்ஸிங் மேட்ச் மிரட்டல் ரகம். அட, யாருப்பா என்று பார்த்தால், இவரின் உண்மையான பெயர் ஷபீர் கல்லரக்கல். இவர் ஒரு நாடக கலைஞர். மேலும், ’பார்க்கவுர்’ (Parkour) என்று அழைக்கப்படும் சண்டைக்கலையில் தேர்ந்தவர் என்பதால் அது அவரை டேன்ஸிங் ரோஸ் ஆக நடிப்பதற்கு உதவியிருக்கிறது. ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்காக முறையாக பாக்ஸிங் பயிற்சி எடுத்திருக்கிறார் ஷபீர்.

Advertisement
Advertisement