இப்படி ஒரு சூப்பர் படத்தை மிஸ் செஞ்சிட்டாரே இந்த மாஸ் ஹீரோ – போஸ்டர் எல்லாம் கூட வந்திருக்கு பாருங்க.

0
2246
sarpatta
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-
Image

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார் பிரபல நடிகர். கடந்த சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரஞ்சித்திடம், ‘சார்பட்டா பரம்பரை’ படம் சூர்யாவிற்காக எழுதப்பட்ட கதையா என்று கேள்வி கேட்டகப்பட்டது. அதற்கு சிரித்துகொண்டே பதில் அளித்த ரஞ்சித், இந்த படத்திற்காக பல பேரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது சூர்யா உட்பட எனக்கு ஆர்யாவை மெட்ராஸ் பட சமயத்தில் இருந்தே தெரியும். அவர் என்னிடம் தனக்காக ஒரு கதையை தயார் செய்யுமாறு அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார். அதனால்தான் இந்த படம் மூலமாக நாங்கள் இருவரும் இணைந்து இருக்கிறோம் என்று கூறி இருந்தார்.

- Advertisement -

சார்பட்டா பரம்பரை படத்தில் 1975ன் பிற்பகுதியில் நடக்கிறது கதை. பிரிட்டிஷார் அறிமுகம் செய்த குத்து சண்டை விளையாட்டை ஒரே குழுவாக குத்துச் சண்டையில் ஈடுபட்டு வந்தவர்கள் பின்னர் சார்பட்டா பரம்பரை, இடியப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்ப செட்டியார் பரம்பரை, கரிய பாபுபாய் பரம்பரை என்று பல்வேறு குழுக்களாக பிரிந்து விடுகிறது. ஆனால், இந்த குத்துச்சண்டையில் சார் பட்டா பரம்பரையைச் சார்ந்தவர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

ஒரு கட்டத்தில் சார் பட்டா பரம்பரைக்கு இடியப்ப நாயக்கர் பரம்பரைக்கும் மோதல் ஏற்பட்டு விடுகிறது. பின்னர் எந்த பரம்பரை ஜெயித்தது. இதில் ஆர்யா எந்த பரம்பரைக்கு சார்பாக சண்டையிடுகிறார் என்பது தான் கதை. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது. நான் கடவுள் படத்திற்கு பின்னர் ஆர்வாவுக்கு ஒரு நல்ல பெயரை இந்த படம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஆனால், இந்த படத்தில் சூர்யா நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு ஏமாற்றம் தான்.

-விளம்பரம்-
Advertisement