டேன்ஸிங் ரோசுடன் ஒப்பிட்டு முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை கலாய்கும் நெட்டிசன்கள் (சரியான குசும்புபா)

0
1458
dancing
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் டான்சிங் ரோஸாக வரும் ஷபீர், கலக்கலான உடல்மொழியுடன் ரிங்கில் இருக்கும்போது ஆர்யாவையும் பின்னுக்குத் தள்ளி மொத்தமாக ஸ்கோர் செய்கிறார்.இவர் ஒரு நாடக கலைஞர். மேலும், ’பார்க்கவுர்’ (Parkour) என்று அழைக்கப்படும் சண்டைக்கலையில் தேர்ந்தவர் என்பதால் அது அவரை டேன்ஸிங் ரோஸ் ஆக நடிப்பதற்கு உதவியிருக்கிறது.

இதையும் பாருங்க : தன்னை ஏமாற்றிய அமைச்சரிடம் 10 கோடி கேட்டுள்ள சாந்தினி (காரணம் கேட்டா ஷாக்காகிடுவீங்க)

- Advertisement -

‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்காக முறையாக பாக்ஸிங் பயிற்சி எடுத்திருக்கிறார் ஷபீர்.இந்த படத்தில் அவரை பார்த்த பலரும் இவர் புதுமுகம் என்று தான் நினைத்து இருப்பீர்கள். 2014ஆம் ஆண்டு லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகியிருக்கிறார் ஷபீர்.

ஜெயம் ரவி நடித்த ‘அடங்க மறு’ படத்தில் கலெக்டரின் மகனாக நடித்து இருப்பார். அதே போல ரஜினி நடித்த பேட்ட படத்திலும் நடித்து இருந்தார். கடந்த இரண்டு நாளாக சமூக வலைதளத்தில் இவரை பற்றிய பதிவுகள் தான் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இவருடன் ஒப்பிட்டு முன்னாள் அ தி மு க அமைச்சர் ஜெயக்குமாரின் பாக்சிங் வீடியோக்களை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

-விளம்பரம்-
Advertisement