தன்னை ஏமாற்றிய அமைச்சரிடம் 10 கோடி கேட்டுள்ள சாந்தினி (காரணம் கேட்டா ஷாக்காகிடுவீங்க)

0
2022
shanthini
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தன்னை முன்னாள் அமைச்சர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி தற்போது தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக நாடோடிகள் பட நடிகை ஷாந்தினி தேவா கூறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நாடோடிகள் படத்தில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் காதல் ஜோடியாக நடித்தவர் சாந்தினி. மலேசியாவை சேர்ந்த இவர் சென்னையில் தான் தங்கி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் முன்னால் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார்.

-விளம்பரம்-

மணிகண்டன் தன்னை காதலித்ததாகவும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் சாந்தினி கூறியிருந்தார் மேலும் ஐந்து வருடங்களாக மணிகண்டன் வாழ்ந்துவந்த தான் அவரால் மூன்று முறை கருக்கலைப்பு செய்து இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததாகவும் சாந்தினி கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : படத்துலயே அசந்துடீங்களே, உண்மையான டேன்ஸிங் ரோஸின் இந்த வீடியோவை பாருங்க மெர்சல் ஆகிடுவீங்க

- Advertisement -

மேலும், சாந்தினி அளித்த புகாரின் பெயரில் மணிகண்டன் மீது 6 வழக்குகள் போடப்பட்டு இருந்தது. மணிகண்டன் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்தனர். கடந்த ஜூலை 7 ஆம் தேதி மணிகண்டன் ஜாமினில் வெளியில் வந்தார். மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கும் தொடர்ந்து உள்ளார்.

சென்னையில் இருந்து கொண்டு வழக்கை நடத்த வேண்டும் என்ற காரணத்தினால் தனக்கு மாதாந்திர இடைக்கால தொகை வழங்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாந்தனி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, தவறாக கமண்ட் செய்பவர்களுக்கு, நீங்களா என் செலுவுகளை பார்க்கிறீர்கள் எனவே உங்கள் வாயை மூடுங்கள் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர். அவரை ஜெயிலுக்கு அனுப்பிட்டு நீ ஜாலியா இருக்க என்று பதிவிட்டு இருந்தார். இதற்க்கு பதில் அளித்த சாந்தினி, அப்படி இருப்பதற்கு நான் தகுதியானவள், உனக்கு எதாவது பிரச்சனையா என்று கேட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement