ரங்கன் வாத்தியார் மனைவியாக நடித்த இந்த நடிகை கே பி குடும்பத்தில் இருந்து வந்தவர் தான்.

0
1799
rangan
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

இதையும் பாருங்க : மருதாணி வச்சத்துக்கே கதறுனாங்க, இந்த water போட்டோ ஷூட்ட பாத்து என்ன கதற போறாங்களோ பரீனாவின் ஹேட்டர்ஸ்.

- Advertisement -

இந்த படத்தில் ஒரு தீவிர தி மு க தொண்டனாக நடித்து இருந்தார் பசுபதி. மேலும், இந்த படத்தில் ஆண் கதாபாத்திரங்களுக்கு இணையாக பெண் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் இந்த படத்தில் பசுபதியின் மனைவியாக நடித்துள்ள கீதா கைலாசம் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழ் திரையுலகில் இயக்குநர் சிகரம் என புகழப்பட்ட கே.பாலச்சந்தர் அவர்களின் மகன் கைலாசத்தின் மனைவி கீதா கைலாசம் தான் இவர். அதாவது இவர் கே.பாலச்சந்தரின் மருமகள். சிறந்த எழுத்தாளரான கீதா கைலாசம், நடிகையாகவும் சார்பட்டா பரம்பரை படத்தில் கலக்கியுள்ளார். தயாரிப்பாளரான இவர் பல்வேரு மேடை நாடங்கங்களை அரங்கேற்றியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், கே பாலசந்தர் மற்றும் இவரது கணவர் இறந்த பின்னர் அவர்கள் நடத்தி வந்த மின்பிம்பங்கள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணத்திற்கு முன் இருந்தே நடிக்க வேண்டும் என்பது தான் ஆசையாம். ஆனால், கே பாலச்சந்தர் கூட இவர் நடிக்க விரும்புகிறார் என்பதை கேட்டது கூட இல்லையாம். இவர் கட்டில் என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகமானார்.

Advertisement