கேப்டன பாத்து தான் என் Productionலயும் அந்த விஷயத்தை கொண்டு வந்தேன் – மேடையில் சசிகுமார் நெகிழ்ச்சி.

0
746
vijayakanth
- Advertisement -

விஜயகாந்த் குறித்து சசிகுமார் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனெக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். மேலும், ரஜினி, கமல், சரத்குமார்,பிரபு போன்ற பல நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது.

-விளம்பரம்-

2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த தான் படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, விஜயகாந்த் அவர்கள் சினிமா உலகில் நடித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் என்ன சாப்பிடுகிறார்களோ அதே தான் எல்லோருக்குமே கொடுக்க வேண்டும் என்று சொல்லுவார்.

- Advertisement -

சசிகுமார் அளித்த பேட்டி:

அவருடைய படங்களில் எல்லாம் அவர் சாப்பிடும் உணவை தான் படத்தில் பணி புரியும் அனைவருக்குமே சாப்பிட கொடுப்பாராம். அந்த அளவிற்கு மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர் விஜயகாந்த். இதை பிரபலங்கள் பலருமே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது தன்னுடைய காரி படத்தின் ப்ரோமோஷன் மீட்டிங்கில் சசிகுமார் அவர்களும் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, விஜயகாந்த் சாரிடம் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் என்றால் அவருடைய யூனிட்டில் பணிபுரியும் போது அனைவருக்குமே ஒரே விதமான சாப்பாடு தருவார். அவர் என்ன சாப்பிடுகிறாரோ அதே தான் அங்கு பணிபுரியும் அனைவருமே சாப்பிடுவார்கள். இதை நான் நேரில் பார்த்தது கிடையாது.

விஜயகாந்த் குறித்து சொன்னது:

நீண்ட இடைவெளிக்கு பிறகு தயாரிப்பாளர் லட்சுமணன் குமார் படபிடிப்பில் அதே போன்று எல்லோருக்கும் சரிசமமான சிறப்பான சாப்பாடு வழங்கப்பட்டதை பார்த்தேன். என்னுடைய யூனிட்டிலும் இதே பழக்கம் தான் பின்பற்றப்படுகிறது. ஆனால், நான் ஒரு படத்தில் நடித்த போது சாப்பாடு சரியில்லை என்று அந்த தயாரிப்பாளரிடம் சொல்லி என்னுடைய சம்பளத்தில் கூட கொஞ்சம் பிடித்துக் கொண்டு அதற்கு பதிலாக நல்ல சாப்பாடு போடுங்கள் என்று சொன்னேன். அவர் சாப்பாடும் போடவில்லை, என்னுடைய சம்பளத்தையும் கொடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

சசிகுமார் திரைப்பயணம்:

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சசிகுமார். இவர் தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். சசிகுமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தின் மூலம் தான் சசிகுமார் இயக்குனராகவும், நடிகராகவும் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் சசிகுமார் ஈசன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதற்கு பிறகு இவர் இயக்குவதை விட்டு தொடர்ச்சியாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் எம்ஜிஆர் மகன், ராஜவம்சம் போன்ற படங்கள் வெளியாகி இருந்தது.

காரி படம்:

கடந்த வாரம் சசிகுமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நான் மிருகமாய் மாற. கழுகு படத்தை இயக்கிய இயக்குனர் சத்யா சிவா தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சசிகுமார் உடன் ஹரிப்ரியா, விக்ராந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து தற்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. இந்த படத்தில் சசிகுமார், பார்வதி அருண் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 25ஆம் தேதி காரி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

Advertisement