நான் ஆனந்த் வைத்தியநாதனை வெறுக்கிறேன்..! பொன்னம்பலத்துக்கு ‘ஆர்மி’.! காமெடி நடிகர் அதிரடி.!

0
1133
- Advertisement -

நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனந்த வைத்தியநாதன் இரண்டாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் வெளியேற்ற பட்டார். ஆனால், அவர் போவதற்கு முன்பாக நடிகர் பொன்னம்பலத்தை பாஸ் பாஸ் சிறையில் அடைக்க விரும்புகிறேன் என்று கூறியதை குறித்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்,இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் அனந்த வைத்யநாதனை வெறுக்கிறேன், பொன்னம்பலம் ஆர்மி துவங்கி விட்டது ” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பின்னணி என்னவெனில், நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் தருவாயில் பொன்னம்பலம் மற்றும் அனந்த் இருந்தனர்.

-விளம்பரம்-

Ponnambalam-In-The-Bigg-Boss-House

- Advertisement -

அப்போது நடிகர் கமல், பொன்னம்பலத்திடம் ஒரு வேலை நீங்கள் பிக் பாஸ் வீட்டில் வெளியேறுதாக இருந்தால் என்ன கூறிவிட்டு வெளியேற நினைக்கின்றனர் என்று கேட்டார். அதற்கு பொன்னம்பலம்”இந்த நிகழ்ச்சியை பல கோடி தமிழர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிறுவர் முதல் பெரியவர் வரை பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் அநாகரிகமாக நடக்க வேண்டாம்,

அதிலும் சிலர் வரம்பு மீறி நடக்கின்றனர். இது நமது தமிழ் கலச்சாரத்திற்கு அழகல்ல “என்று கூறினார். இதற்கும் கமலும் “இதை நானே சொல்லி இருப்பேன், எனக்கு முன்னாள் நீங்கள் கூறிவிட்டீர்கள்” என்று தெரிவித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனந்திற்கு நடிகர் கமல் , போட்டியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக நீங்கள் யாரை வேண்டுமானாலும் பிக் பாஸ் சிறையில் அடைத்து விட்டு செல்லலாம் என்று கூறினார்.

-விளம்பரம்-

இதற்கு அனந்த , நடிகர் பொன்னம்பலத்தை சிறையில் அடைப்பதாக கூறினார். இதற்கு காரணத்தை சொன்ன அவர் “பொன்னம்பலம் இன்று பேசியது மிகவும் தவறு ஒரு பெண்ணுக்கு யாரிடம் எப்படி பழக வேண்டும், யாரை கட்டிப்பிடிக்க என்று முடிவெடுக்க உரிமை உள்ளது” என்று கூறினார். இதனால் தமிழ் கலாச்சரித்தற்காக பேசிய பொன்னம்பலத்தை, அனந்த இப்படி பேசியதை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisement