வயசு வித்யாசம் பாக்கமா வாடா போடாவென்று பேசிய பார்வதி – மேடையிலேயே பதிலடி கொடுத்த சதீஷ்.

0
781
- Advertisement -

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் சதீஷிற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. நடிகர் சதிஷ், ஜித்தன் ரமேஷ் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெர்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் பல படங்களில் காமெடியான நடித்தார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி,விஜய், அஜித் சூர்யா என்று பலரின் படங்களில் காமெடியான நடித்த சதீஷ் ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இதனை தொடர்ந்து பல படங்களில் காமெடியான நடித்து வரும் சதிஷ் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் சேகர் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிய சதிஷ் ‘சன்னி லியோன் பாம்பேவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். அவங்க எப்படி டிரஸ் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தீர்கள். கோயம்புத்தூரில் இருந்து ஒரு பொண்ணு வந்திருக்கிறது. ‘தர்ஷா குப்தா’ அவங்க எப்படி நம்ம கலாச்சாரத்தில் வந்திருக்கிறார்கள் என்பதை சும்மா சொன்னேன்’ என்று தர்ஷா குப்தாவை கலாய்த்து இருந்தார்.

இவரின் இந்த பேச்சைக் கண்டு நிட்டிசன்கள் பலரும் திட்டி தீர்த்து வந்தனர். பின்னர் இந்த சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சதிஷ் ‘குடிமகான்’ என்ற படத்தின் இசை வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் சதிஷ். மேலும், இந்த விழாவில் யூடுயூ vjவன பார்வதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். வழக்கம் போல கூட்டத்தில் இருந்த இளசுகளை எல்லாம் வாடா போடா என்று பேசிக்கொண்டு இருந்தார் பார்வதி.

-விளம்பரம்-

பின்னர் மேடை ஏறி சதிஷ் ‘உங்கள் மீது பசங்க வைத்திருக்கும் மரியாதையை நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன் நானும் வந்ததுல இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் பார்க்காமல் அவனை இவனே வாடா போடா என்று பேசிக் கொண்டிருந்தார் ஆனால் அவர்கள் அதனை பெரும் முதன்மையாக எடுத்துக் கொண்டார்கள் ஆனால் யோசித்துப் பாருங்கள். இதுவே ஏதாவது ஒரு பெண்ணிடம் சென்று ஏண்டி நல்லா இருக்கியா டி என்று கேட்டால் என்ன ஆகும்.

அதுதான் ‘The Boys’ நாங்கள் அதனை பெருந்தன்மையாக எடுத்துக் கொள்கிறோம். அதே போல ஆங்கரிங்கிள் உங்களிடம் ஒரு நல்ல விஷயத்தை கற்றுக் கொண்டேன். அது என்னவென்றால் பசங்களிடம் சென்று ‘என்னடா நான் நன்றாக இருக்கிறேனா’ என்று கேட்கிறார்கள். அவர்கள் பதிலே சொல்லவில்லை என்றாலும் ‘நான் நல்லா இருக்கேனா நன்றி’ என்று இவங்களே வந்து விடுகிறார்கள்’ என்று பார்வதியை பங்கமாக கலாய்த்து உள்ளார்.

Advertisement