வடிவேலு ரீ – என்ட்ரி படமாக அமைய இருந்த ‘நாய் சேகர்’ தலைப்பில் சதீஷ் – பங்கமாக கலாய்த்த நடிகர்.

0
3342
sathish
- Advertisement -

தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்ற பிகில் படத்தைத் தொடர்ந்து தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் நகைச்சுவை நடிகர் சதீஸ்ஸை வைத்து ஒரு படம் தயாரிக்கிறார்கள். முதன்முதலாக சதீஸ் அவர்கள் கதாநாயகனாக இந்த படத்தில் தான் நடிக்கிறார். இப்படத்தில் சதீஸ்க்கு ஜோடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி நடிக்கிறார். இந்த படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-
Image

மேலும், இந்த படத்திற்கு பிரவீன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் அஜீஷ் அசோக் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த படத்துக்கு ‘நாய் சேகர்’ என்று தலைப்பு வைத்து உள்ளனர். இந்நிலையில் நடிகர் வடிவேலு பல வருடங்களுக்கு பிறகு தற்போது தான் நடிக்க இருக்கும் படத்திற்கு தான் நாய் சேகர் என்ற தலைப்பு வைக்க திட்டமிட்டு இருந்தது.

இதையும் பாருங்க : அந்த கிழங்க யாரோ நட்டு வச்ச மாதிரி தெரியுது – ரசிகரின் கமென்டிற்கு ஜீ தமிழ் எப்படி சமாளித்து உள்ளது .

- Advertisement -

வடிவேலு நடிக்கும் இந்த படத்தை சுராஜ் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகிஇருந்தது. அதோடு சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் இந்த படம் தலைப்பு குறித்து சதிஸ்க்கா? வடிவேலுக்கா? என்று பல சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் தற்போது இந்த நாய் சேகர் தலைப்பு சதீஷ்க்கு தான் என்று உறுதியாக இருப்பது இந்த பர்ஸ்ட் லுக் மூலம் உறுதியானது.

மேலும், நடிகர் வடிவேலு நடிக்கும் தன்னுடைய புதிய படத்தை வேறு ஒரு தலைப்பை வைத்து தான் எடுக்கவேண்டிய சூழல் உருவாகி உள்ளது.இதனால் வடிவேலுவின் ரசிகர்கள் பெரும் அப்சட் அடைந்து உள்ளனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் மிர்ச்சி சிவா, கூலிங் கிளாஸ்லா போட்டு ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க, வாழ்த்துக்கள் ப்ரோ என்று கேலி செய்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement