அந்த கிழங்க யாரோ நட்டு வச்ச மாதிரி தெரியுது – ரசிகரின் கமென்டிற்கு ஜீ தமிழ் எப்படி சமாளித்து உள்ளது பாருங்க.

0
7296
survivor
- Advertisement -

சமீபகாலமாகவே ஒவ்வொரு சேனலும் தங்களின் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமாக நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி சர்வைவர் என்ற ஒரு ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்புகிறார்கள். வெவ்வேறு குணாதிசியங்கள் நிறைந்த மனிதர்களை சவால்கள் நிறைந்த ஓரிடத்தில் ஒன்று சேர்த்த பிறகு அவர்கள் கொடுக்கும் சவால்களை கடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சர்வைவர்.

-விளம்பரம்-
survivor

மேலும், ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சர்வைவர். நடிகர் அர்ஜுன் முதல் முறையாக தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகிறார். சவால்கள் நிறைந்த தனித்தீவில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

இதையும் பாருங்க : கையில் இருக்கும் பிளேடு காயங்களை மறைக்க ஜாக்லின் போட்டுள்ள டாட்டூ – வைரலாகும் புகைப்படம் இதோ.

- Advertisement -

இந்த ஷோ மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதே போல இந்த ஷோ ஆரம்பித்த சில நாட்களிலேயே சில சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறது. பொதுவாக ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி ஆரம்பித்தாலே அதில் நடக்கும் விஷயங்கள் ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு ஸ்கிரிப்ட் தான் என்ற விமர்சனங்கள் விழுந்துவிடும், அதற்கு இந்த சர்வைவர் நிகழ்ச்சியும் விதிவிலக்கா.

survivor

கடந்த சில தினங்களுக்கு முன் பெசன்ட் ரவி மற்றும் அம்ஜத் இருவரும் உணவு தேடி தீவை சுற்றிப் பார்க்கும்போது அங்கே ஒரு கிழங்கு செடி இருப்பதை கண்டுபிடிக்க, அதனை பெசன்ட் ரவி அலேக்காக பிடிங்கியதை பார்த்த பலருக்கும் எப்படி அதை அவ்வளவு சுலபமாக பிடிங்கினார் என்ற கேள்வி எழுந்தது.

-விளம்பரம்-
survivor

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் ‘பெசன்ட் ரவி பிடிங்கிய அந்தஅந்த கிழங்கு யாரோ உண்டி வைச்ச மாதிரி தெரியுது என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஜீ தமிழ் ‘ப்ரோ, இதுக்கு எல்லாம் சந்தேகப்படுகிறார்கள் நம்பர் என்றால் அடுத்த சீசனில் உங்கள கன்டஸ்டன்டா போட்டுருவோம் வாங்க’ என்று சமாளித்து இருக்கிறது.

Advertisement