தனியார் மருத்துவமனை குறித்து சத்யராஜ் மகள் பகிர்ந்து இருக்கும் மெசேஜ் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. “கட்டப்பா” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் கட்டிப் போட்டவர் சத்யராஜ். கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாகி இருந்தார். அதனை அடுத்து இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து இருந்தார்.

மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் ஆரம்பத்தில் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தார். தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

சத்யராஜ் குறித்த தகவல்:

கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் சிங்கப்பூர் சலூன். ஆர் ஜே பாலாஜி, மீனாட்சி, ரோபோ சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது சத்யராஜ் அவர்கள் Thozhar CheGuevara என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகி இருக்கிறார். மேலும், சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற ஒரு மகனும் மற்றும் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

சத்யராஜ் மகள் குறித்த தகவல்:

சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் திவ்யா அப்படி இல்லை. இவர் சிறு வயதில் படங்களில் நடிக்க ஆசை பட்டாலும் பின்னர் வேறு துறைக்கு மாறிவிட்டார். தனது அப்பாவினை போலவே இவரும் ஒரு நாத்திகவாதி. இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிசனிஸ்ட்களில் ஒருவராக சத்தியராஜ் மகள் திவ்யா இருக்கிறார். நியூட்ரிஷன் துறையில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் நியூட்ரிஷன் துறையில் பல கான்பெரன்ஸ் நடத்தியுள்ளார்.

Advertisement

திவ்யா பதிவு:

அடிக்கடி ஊட்டச்சத்து குறித்த பல பயனுள்ள பதிவுகளை திவ்யா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் மருத்துவத்துறையில் நடக்கும் ஒரு மோசமான விஷயம் குறித்த வீடியோவை தான் திவ்யா பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், தனியார் மருத்துவமனைகளில் பணத்திற்காக சும்மாவே ரத்தப் பரிசோதனை என்று சொல்லி பல டெஸ்டுகள் எடுக்க சொல்கிறார்கள். நோயாளிகள் குணமடைந்தாலும் பணத்திற்காக அங்கேயே வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

தனியார் மருத்துவமனை குறித்து சொன்னது:

ஒரு தரமான சிகிச்சைக்காக தான் எல்லோரும் தனியார் மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆனால், அங்கேயும் பணம் பிடுங்கும் இடமாக இருக்கிறது. எங்களுடைய நிறுவனம் மூலம் நாங்கள் பல பேருக்கு உதவி செய்து வருகிறோம். ஆனால், எல்லா நோயாளிகளுக்கும் உதவ முடியாது. சில தனியார் மருத்துவமனைகள் இதுபோல செய்வதை நிறுத்த வேண்டும். இது சேவையாக செய்ய வேண்டும். பணம் பிடங்கும் இடமாக மருத்துவத்தை பார்க்க கூடாது என்று பேசி இருக்கிறார்.

Advertisement