மெடிக்கல் ஷாப் போறீங்களா ? சத்தியராஜ் மகள் சொல்வதை படியுங்க – எஸ் கே போட்ட ட்வீட்.

0
4251
sathyaraj
- Advertisement -

கடந்த சில மாதங்களாகவே உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவினால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்து உள்ளார்கள். இருந்தாலும் இன்னும் கொரோனவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. மேலும், மே மாதம் நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் கொரோனா குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியது, லாக்டவுன் காலத்தில் மருந்து கடைகளுக்கு வரவேண்டிய சப்ளை வராமல் இருக்கலாம். வெளியூர்களிலும், வெளிநாடுகளிலிருந்தும் வர வேண்டிய மருந்துகள் லாக்டவுனால் மருந்துக் கடைக்கு வந்து சேர முடியாது.

-விளம்பரம்-

அதனால் சில மருந்து கடைகளில் பழைய மருந்துகள் இருப்பு இருக்கலாம். மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் வாங்கும் மருந்துகளின் காலாவதி தேதியை கவனமாக பார்த்த பின்னரே மருந்துகளை வாங்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு வாங்கும் பால் பவுடர், க்ரீன், ஷாம்பூ, பேபி ஆயில் போன்ற அனைத்து பொருட்களின் காலாவதி தேதியை பார்த்து வாங்குவது மிக மிக அவசியம். காலாவதியான மருந்துகளை உபயோகிப்பதால் உடலில் பல பிரச்சனைகள் வரும்.

- Advertisement -

மேலும், மருந்து கடை வைத்திருப்பவர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அது மக்கள் அனைவரும் தன் வாழ்வில் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தில் தான் மருந்து வாங்க வருகிறார்கள். அவர்கள் வாங்கும் மருந்து அவர்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில் தான் வாங்குகிறார்கள். அதனால் உங்கள் கடைகளில் காலாவதியான மருந்துகளை தயவு செய்து தூக்கி போட்டு விடுங்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த அறிக்கையை தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதில் அவர் மருந்து வாங்குவோருக்கு தேவைப்படும் முக்கியமான செய்தியை திவ்யா சத்யராஜ் கூறியிருக்கிறார். எனக்கு தோன்றியதை நீங்களும் நினைத்தால் இந்த மெசேஜை பகிருங்கள் என்று கூறியுள்ளார். தற்போது இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement