பட்டியானாலும் சரி, சிட்டி ஆனாலும் சரி எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் எம்ஜிஆர். இவருடைய முழு பெயர் மருதூர் கோபாலன் மேனன் ராமச்சந்திரன். இவர் தொடக்க காலங்களில் நாடகங்களில் நடித்து வந்தார். பின் இவருடைய நடிப்பு திறமையினால் தமிழ் சினிமா உலகில் புகழ் ஓங்கி இருந்தார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டு இருந்திருந்தார். மேலும், அறிஞர் அண்ணா கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின் அதிமுக கட்சியை உருவாக்கி தமிழக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அரசியலில் சாதனை புரிந்தவர்.
தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும், இறக்கும் வரை முதலமைச்சராகவும் இருந்து சென்றவர். நடிகராக இருந்தும், அரசியல்வாதியாக இருக்கும்போதும் சரி பலபேருக்கு பல உதவிகளை எம்ஜிஆர் செய்திருக்கிறார். நாட்டு மக்களின் நலனுக்காகவே வாழ்ந்து சென்ற தியாகம் என்று சொல்லலாம். இன்றும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த வகையில் இவருடைய தீவிர ரசிகர் தான் நாமக்கல் எம்ஜிஆர்.
இவர் பார்ப்பதற்கு அப்படியே எம்ஜிஆர் போல் இருப்பார். இதனால் இவரை அனைவரும் கில்லியும், தொட்டும் பார்ப்பார்கள். இந்நிலையில் நாமக்கல் எம்ஜிஆர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர் மறைந்த எம்ஜிஆர் பற்றி கூறியிருப்பது, நான் எம்ஜிஆர் உடைய ரசிகன் என்று சொல்வதை விட வெறியன் என்று சொல்லலாம். 14 வயதில் இருக்கும்போதே நான் எம்ஜிஆர் மீது அதிக ஈர்ப்பு கொண்டேன். அப்போதிலிருந்தே நான் அவரைப் போல் நடிப்பது, நடப்பது, பேசுவது என்று ஆரம்பித்தேன்.
பின் 19 வயதிற்கு மேல் என் பற்கள் எல்லாம் அவரை போல் இருக்க வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாகப் பல் வரிசையை ஆபரேஷன் செய்து மாற்றினேன். பின் என் முகத்தையும் எம்ஜிஆர் போல் இருக்க வேண்டும் என்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன். ஆப்ரேசன் செய்து ஒரு வருடம் நான் வீட்டை விட்டே வெளியே வரவில்லை. கொஞ்சம் கஷ்டமாக இருந்தது இருந்தாலும் எம்ஜிஆர் அய்யாவை என் மூலம் பார்க்கப் போகிறார்கள் என்று நினைத்து நான் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன்.
இன்றும் அவரை என் மூலம் மக்கள் பார்க்கிறார்கள் என்பதை நினைத்தால் எனக்கு ரொம்ப பெருமையாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது. எம்ஜிஆர் இவ்வுலகில் இல்லை என்றாலும் எல்லாருடைய மனதிலும் எப்போதும் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவருடைய பாடல்கள் எல்லாம் நான் நடித்து இருக்கிறேன்.அந்த வீடியோக்கள் எல்லாம் யூடூப்பில் இருக்கிறது. மேலும், அதை பார்த்து எல்லோருமே அவரை போல் இருக்கிறார் என்று என்னைப் பாராட்டுவார்கள். அதனால் நான் அவரைப் போலவே நான் மாறினேன்.
அவர் இருக்கும் போது முடிந்தவரை எல்லோருக்கும் உதவி செய்து விட்டு தான் சென்றார். அதனால் நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு வருகிறேன் என்று உணர்வுபூர்வமாக பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நாமக்கல் எம்ஜிஆர் கதாநாயகனாக உழைக்கும் கைகள் என்ற படத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.