ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளில் சத்யராஜ் வீட்டில் நேர்ந்த இழப்பு. திரையுலகினர் இரங்கல்.

0
703
Sathyaraj
- Advertisement -

நடிகர் சத்தியராஜ் வீட்டில் நிகழ்ந்த துயர சம்பவத்தால் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் சத்யராஜ். இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என்று பல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. அதிலும் சில வருடங்களுக்கு முன் இவர் பாகுபலி படத்தில் நடித்த கட்டப்பா கதாபாத்திரத்தின் மூலம் தற்போது வரை இவரை கட்டப்பாகவே பார்க்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார் என்பவர் இன்று காலம் ஆகி இருக்கிறார். இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வசித்து வந்தார். காங்கிரசை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரின் மகன் அர்ஜுன் மன்றாடியார். இவருடைய மனைவி தான் கல்பனா மன்றாடியார். மேலும், கல்பனா– அர்ஜுன் மன்றாடியார் தம்பதிக்கு மகேந்திர் என்ற மகன் உள்ளார்.

- Advertisement -

இவர் நடிகர் சத்யராஜின் மகளான டாக்டர் திவ்யாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களாகவே கல்பனா உடல்நிலை குறைவாக இருந்திருக்கிறார். பின் இவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் இன்று காலை சிகிச்சை பலனின்றி கல்பனா காலம் ஆகி இருக்கிறார்.

மேலும், அவருடைய இறுதி சடங்கு இன்று நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சத்யராஜ் மற்றும் அவருடைய குடும்பத்திற்கு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மூக வலைத்தளங்களில் பிரபலங்களும், ரசிகர்களும் சத்யராஜுக்கு தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement