‘அளந்துவிட்ட சாட்டை துரைமுருகன்’ – ஹாசன் என்ற பெயருக்கு காரணம் இது தான் – வைரலாகும் கமல் சகோதரர் சாருஹாசனின் வீடியோ

0
1827
- Advertisement -

கமலஹாசன் கன்னடத்தை சேர்ந்தவர் என்று சாட்டை துரைமுருகன் கூறிய கருத்துக்கு கமலஹாசனின் அண்ணன் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை, எழுத்தாளர் என பன்முகம்கொண்டவர். தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சித்தா. இந்த படத்தை ETAKI ENTERTAINMENT நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பற்றி இந்த படம் பேசியிருக்கிறது. மேலும், இந்த படத்தை கன்னடத்தில் சிக்கும் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

பிரஸ் மீட்டில் நடந்தது:

இதனால் இந்த படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் சித்தார்த் அவர்கள் கர்நாடகாவிற்கு சென்று இருக்கிறார்.
அங்கு கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் பிரஸ்மீட்டிற்குள் நுழைந்து சித்தார்த்தை மிரட்டி இருக்கின்றனர். இருந்தாலும் முதலில் சித்தார்த் கண்டுகொள்ளாமல் அமைதியாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த கன்னட அமைப்பினர் மேடைக்கு முன் நின்று கோஷமிட்டு அந்த அமைப்பினர் சித்தார்த்தை தொடர்ந்து வெளியேறுமாறு மிரட்டி இருக்கின்றனர். இதனால் சித்தார்த் அங்கிருந்து வெளியேறி இருந்தார். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல் குறித்த விமர்சனம்:

இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் என்பவர் கமலஹாசனை விமர்சித்து சொன்னது, தமிழ்நாட்டில் உள்ள கன்னட நடிகர்கள், இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள் என அனைவரையும் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றினால் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். தற்போது உலகநாயகனாக கொண்டாடப்படும் கமலஹாசனும் ஒரு கன்னடர் தான். அவர் பரமக்குடியில் பிறந்திருக்கிறார் என்று சொன்னாலும் அவர் கர்நாடகாவில் உள்ள ஆசான் என்ற பகுதியை சேர்ந்தவர்.

-விளம்பரம்-

சாருஹாசன் கொடுத்த விளக்கம்:

அதனால் தான் அவருடைய பெயருக்கு பின்னால் கமலஹாசன் என்று வந்தது என்று பேசிருந்தார். இப்படி இவர் பேசி இருந்த வீடியோ இணையத்தில் வெளியான தொடர்ந்து இது குறித்து பலருமே கமெண்ட் செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் கமலஹாசன் பெயரின் உண்மையான காரணம் குறித்து அவருடைய அண்ணன் சாருஹாசன் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் அவர், எங்களுடைய பெயருக்கு பின்னால் வரும் ஹாசன் பெயருக்கு காரணம் என்னவென்றால் என்னுடைய தந்தையின் நண்பர் முஸ்லிம்.

ஹாசன் பெயருக்கு காரணம்:

அவருடன் இருந்த நட்பு ரீதியாக தான் எங்களுடைய பெயருக்கு பின்னால் ஹாசன் என்று வைத்தார். எங்களுடைய தந்தை இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்காக போராட்டங்கள் எல்லாம் செய்திருக்கிறார். அதனால் தான் அவர் இப்படி பெயர் வைத்தார். ஹாசன் பெயர் சமஸ்கிருத மொழி சொல் என்று கூறியிருந்தார். இதை பார்த்து பலரும் சாட்டை துரைமுருகனை விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement