முதல் ஆளாக முந்தி சென்று வாக்களித்தால் வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டாரா விஜய் ? வைரல் வீடியோவின் பின்னணி.

0
463
- Advertisement -

கடந்த சில வாரங்களாகவே தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. 10 வருடங்களுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சியினரும் உற்சாகத்தில் உள்ளார்கள். மேலும், தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பயங்கரமாக ஆயுதமாக்கி வந்தார்கள். இதில் விஜய்யின் மக்கள் இயக்கம் உறுப்பினர்களுக்கும் தேர்தலுக்கு தயாராகி உள்ளார்கள். வழக்கம் போல் இதில் எதிர் கட்சி அதிமுக, ஆளும் கட்சி திமுக, பாஜக, நாம் தமிழர், சுயேட்ச்சை வேட்பாளர் என பல கட்சிகள் போட்டியிட இருக்கிறது.

-விளம்பரம்-

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இப்படி தீவிரமாக அனைத்துக் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தது முடிந்து மக்கள் அனைவரும் இன்று ஒட்டு போட்டு வருகிறார்கள். தீவிரமாக மக்களும் தங்களுடைய ஜனநாயக கடமையை செய்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யும் தன்னுடைய ஜனநாயக கடமையை செய்ய வாக்கு சாவடி நடக்கும் இடத்திற்கு சென்று இருக்கிறார்.

- Advertisement -

தேர்தலுக்கு வாக்களிக்க சென்ற விஜய்:

இந்த நிலையில் விஜய் வாக்களிக்க வந்த இரண்டு வாக்காளர்களிடம் மட்டும் மன்னிப்பு கேட்டு இருப்பதாக வதந்திகள் வெளியாகி உள்ளது. அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கூறி இருப்பது, இன்று காலை நடிகர் விஜய் அவர்கள் சென்னை நீலாங்கரையில் அமைந்து உள்ள வாக்குச்சாவடிக்கு 7மணிக்கு சென்றிருக்கிறார். விஜய் தனியாகவே வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடத்திற்கு வந்தார். அங்கு வாக்குச்சாவடியில் போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.

விஜய் மன்னிப்பு கேட்ட வதந்தி:

விஜய் வந்த தருணத்தில் அங்கு 2 பேர் மட்டுமே அங்கு இருந்தார்கள். அப்போது அங்கிருந்த ஒரு மூதாட்டி ஒருவர் நடிகர் விஜய்யை பார்த்து வணக்கம் தெரிவித்தார். அதற்கு விஜய்யும் புன்னகைத்து அந்த மூதாட்டிக்கு வணக்கம் கூறினார். ஆனால், நடிகர் விஜய் வாக்குசாவடிகளில் வாக்களிக்க வந்தவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார் என்று வதந்திகளை பரப்பி இருக்கிறார்கள். அது உண்மை இல்லை. விஜய் வாக்களிக்க வந்த தருணத்தில் அங்கு இரண்டு பேர் மட்டுமே வாக்களிக்க வந்திருந்தார்கள். அவர்கள் வணக்கம் அளித்ததற்கு விஜய் பதிலுக்கு வணக்கம் அளித்திருக்கிறார் தவிர மற்றபடி அவர் எந்த ஒரு மன்னிப்பையும் கேட்கவில்லை.

-விளம்பரம்-

வைரலாகும் விஜய் வாக்கு அளிக்கும் வீடியோ:

அதுமட்டுமில்லாமல் விஜய் தன்னுடைய வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து போதும் எந்த ஒரு ரசிகர்களிடம் பேசவில்லை, எந்த ஒரு புகைப்படமும் எடுத்துக் கொள்ளவில்லை. விஜய் வீட்டில் இருந்து கிளம்பி வாக்கு சாவடிக்கு வந்தார். வாக்களித்தார் பின் சென்று விட்டார். இது தான் நடந்தது. தேவையில்லாத சிலர் விஜய் மன்னிப்பு கேட்டதாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அந்த மாதிரி எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை என்று கூறி இருக்கிறார்கள். தற்போது சோசியல் மீடியாவில் விஜய் குறித்து பரவிவந்த வதந்திக்கு இந்த வீடியோ மூலம் தெளிவான விளக்கம் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கம்:

மேலும், 2020ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். அதில் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டார்கள். அதில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டு உள்ளது. இதில் விஜய் மக்கள் இயக்கம் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவார்களா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement