தமிழ் சினிமாவில் உள்ள எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா, பிரசன்னா – ஸ்னேகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் ஆர்யா – சயீஷா ஜோடியும் ஒருவர். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் ஆர்யா – நடிகை சயிஷாவை திருமணம் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி படு கோலாகலமாக நடைபெற்றது. தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா.
இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார்.இந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க கலர்ஸ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி கூட நடைபெற்றது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளவில்லை ஆர்யா. இருப்பினும் 38 வயதில் 21 வயதான சாயிஷாவை திருமணம் செய்த்து கொண்டார்.
ஆர்யா சயீஷா மகள் :
இவர்கள் இருவரும் காதலித்த சில மாதத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் ஒன்றாக டெடி படத்தில் கூட நடித்து இருந்தனர். இந்த நிலையில் நடிகை சயீஷாவிற்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த இத்தனை மாதங்கள் ஆகியும் தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடவில்லை.
குழந்தை பிறந்த பின் சயீஷா :
அதே போல குழந்தை பிறந்த பின் தன் எந்த ஒரு லேட்டஸ்ட் புகைப்படத்தையும் வெளியிடாமல் இருந்த சயீஷா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தன் புகைப்படத்தை வெளியிட்டார். பொதுவாக பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு உடல் எடை போடுவது வழக்கமான ஒன்றுதான் பிரசவத்திற்கு பின்னர் உடல் எடையை குறைப்பதும் பெண்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது.அதிலும் நடிகைகள் குழந்தை பெற்ற பின்னர் தங்கள் உடல் தோற்றத்தை பழையபடி கொண்டுவர முன்பைவிட அதிக உடற்பயிற்சி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பிரசவத்திற்கு பின் எடை குறைப்பு :
ஆனால் சாயிஷா விஷயத்தில் குழந்தை பிறந்த பின்னரும் அவர் அதே அழகுடன் தான் இருக்கிறார்.இருப்பினும் தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் பிரசவத்திற்கு பின்னர் உடல் எடையை குறைப்பது குறித்து பதிவு ஒன்றை போட்டிருக்கும் சாயிஷா ‘ பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையை குறைப்பது எளிதல்ல. இருப்பினும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் ஒருவர் சீராகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும், இல்லையேல் நீங்கள் கூடுதல் எடையை இழப்பது தவிர்க்க முடியாதது.
Fitness குறித்த சயீஷா :
ஒருவர் சாத்தியமற்ற இலக்குகளை அமைக்கக்கூடாது. ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்த வழியில் அழகாக இருக்கிறாள். மெலிதாக இருப்பது நல்லது, ஏனெனில் இது உள்ளுறுப்பு கொழுப்பிலிருந்து நமது உறுப்புகளைகாக்கும். ஆரோக்கியமாக இருப்பதுதான் இலக்காக இருக்க வேண்டும்.அதற்கு நேரம் எடுக்கும். ஒரு பிரபலத்தைப் பார்த்து உங்கள் இலக்கை மட்டும் அமைக்காதீர்கள். ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு உடல் மற்றும் ஆரோக்கிய நிலை உள்ளது. இந்தப் புகைப்படம் எனக்கு உடற்தகுதி வாழ்க்கைமுறை என்பதையும், அது எனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் இருக்கிறது ‘ என்று பதிவிட்டுள்ளார்.