கொரோனாவால் சயீஷா வீட்டில் ஏற்பட்ட மரணம் – மற்றொருவரும் கவலைக்கிடம்.

0
1144
Sayyesha

நடிகர் ஆர்யாவின் மனைவியும் நடிகையுடமான சயீஷா வீட்டில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் ஆர்யா – சயீஷா குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 4, 5 மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள்.

இஹ்சான் மற்றும் அஸ்லாம்

சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.தமிழ் சினிமாவில் நடிகர் விஷால், நடிகர் கருணாஸ், நடிகை நிக்கி கல்ராணி, பாடகர் எஸ் பி பி போன்ற பலர் கொரோனா தாக்கத்திற்கு ஆளாகினர். தமிழ் சினிமாவில் நடிகர் விஷால், நடிகர் கருணாஸ், நடிகை நிக்கி கல்ராணி, பாடகர் எஸ் பி பி போன்ற பலர் கொரோனா தாக்கத்திற்கு ஆளாகினர்.

- Advertisement -

இந்த நிலையில் பிரபல நடிகையான சயீஷாவின் தாத்தா ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். பாலிவுட்டின் பழம் பெரும் நடிகரான திலீப் குமார், நடிகை சயீஷாவின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நடிகரான திலீப் குமாருக்கு இஹ்சான் கான் மற்றும் அஸ்லாம் கான் என்று இரண்டு தம்பிகள் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 16ம் தேதி மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

மருத்துவ பரிசோதனையில் இஹ்சான் கான் மற்றும் அஸ்லாம் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இளைய சகோதரரான அஸ்லாம் கான் சிகிச்சை பலன்றி இன்று உயிரிழந்தார். அவருக்குசர்க்கரை, உயர் ரத்தம் அழுத்த, இருதய கோளாறு போன்ற பிரச்சனைகள் இருந்துள்ளனர்,

-விளம்பரம்-
Advertisement