தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் 6 ல் இருந்து 60 வரை இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அதே போல இவருக்கு குட்டீஸ்களின் பட்டாளமும் மிகவும் அதிகம் தான். அதனால் தான் பெரும்பாலான இவரது படத்தின் பாடல்களில் குட்டீஸ்கள் கண்டிப்பாக நடனமாடி இருப்பார்கள்.
இந்த நிலையில் பள்ளி தேர்வில் ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன்,மாஸ்டர் படத்தை பற்றி எழுதிய பதில் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நான் தியேட்டருக்கு சென்றது என்ற சிறு கட்டுரைக்கு பதில் அளித்துள்ள அந்த மாணவன், இந்த ஆண்டு மகர சங்கராந்தியின் போது முதல் முறையாக நான் தியேட்டருக்கு சென்றேன். நான் பார்த்தது விஜய் நடித்த மாஸ்டர் என்ற தென்னிந்திய திரைப்படம். நான் என்னுடைய நண்பர்களுடன் தியேட்டருக்கு சென்று இருந்தேன்.
அந்த திரைப்படத்தை நான் மிகவும் ரசித்தேன். காரணம் அந்த திரைப்படம் சிறுவர்கள் எப்படி ஆபத்தான குற்றங்களுக்கு நடுவில் வாழ்கிறார்கள். அப்போது மாஸ்டர் ஜேடி அவர்களுக்கு உதவி அவர்களை எப்படி ஆபத்தில் இருந்து கொண்டு வருகிறார் என்பது போல இருந்தது. குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடல் என்னுடைய மனதில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்கில் கூட்டம் முழுவதும் இல்லை. ஆனால், படம் அருமையாக இருந்தது.
மீண்டும் ஒரு முறை என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கேட்டதற்கு செல்ல வேண்டும் என்று யோசித்து வருகிறேன் இவ்வாறாக அந்த மாணவன் எழுதி இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது தளபதி விஜய் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கும் ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.